Categories: Cinema News latest news

என்ன லிஸ்டு நிக்காம போகுது!.. 2 வருஷத்துக்கு அனிருத் கிட்ட நெருங்க முடியாது போலயே..

Music Director Anirudh: தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாமல் டாப் நடிகர்களின் திரைப்படங்களே இல்லை என்கின்ற அளவிற்கு மிகவும் பிசியாக இருந்து வருகின்றார் அனிருத். தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்கின்ற திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை தொடங்கியவர் அனிருத்.

அதன் பிறகு எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி, மான் கராத்தே என தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தார். தற்போதைய இளைஞர்களை கவர்ந்த வகையில் வைபான மியூசிக்கை போட்டு அனைவரையும் கவர்ந்து வைத்திருக்கின்றார் அனிருத்.

விடாமுயற்சி திரைப்படம்: அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்திற்கு கடைசியாக அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இருந்த பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய அளவுக்கு வெற்றியை கொடுத்தது. படம் கலவையான விமர்சனங்களை சந்தித்த போதிலும் பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அனிருத் இசையமைக்கும் பாடல்கள் ஏற்கனவே வெளிவந்த பாடலாக இருக்கும். இல்லையென்றால் ஹாலிவுட் மியூசிகை காப்பி அடித்து இசையமைத்து வருகின்றார் என்று அவர் மீது தொடர்ந்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்படும். இருப்பினும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அனிருத் தொடர்ந்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.

அனிருத் லைன் அப்: அனிருத் தற்போது மொத்தம் 14 திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 3, நடிகர் விஜய் தேவர்கொண்டா நடித்துவரும் கிங்டம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் கூலி, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து வருகின்றார்.

இதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 23 திரைப்படம், நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக இருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கின்றார்.

இது இல்லாமல் தெலுங்கில் நானி நடிப்பில் உருவாகி வரும் த பாரடைஸ் திரைப்படத்திற்கும், ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் கிங் என்கின்ற திரைப்படத்திற்கும், என் டி ஆர் நடிப்பில் உருவாகி வரும் தேவாரா 2, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ரோலக்ஸ் திரைப்படம்,

அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் 2 திரைப்படம், கடைசியாக தனுஷ் நடிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் தனுஷ் 56 திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ஏகப்பட்ட திரைப்படங்களை கமிட் செய்து வைத்திருக்கின்றார் அனிருத்.

Published by
ramya suresh