Categories: Cinema News latest news

ரஜினியை அப்படியே காப்பி அடிச்ச அனிருத்!.. இதெல்லாம் தேவையா?!.. வைரல் வீடியோ!…

Coolie song: தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் அனிருத். இவர் ரஜினியின் உறவினர். ரஜினியின் மகளை தனுஷ் திருமணம் செய்து கொண்டதால் தனுஷுக்கும் உறவினராக மாறினார். தனுஷ், சிவகார்த்திகேயன், நயன்தாரா போன்றவர்களின் படங்களில் இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தார்.

தனுஷும் சிவகார்த்திகேயனும் ஒருகட்டத்தில் பிரிந்துவிட்டனர். அப்போது அனிருத் சிவகார்த்திகேயன் பக்கம் போனார். தனுஷுக்கு பிடிக்காத சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா குரூப்பில் அனிருத் இருந்தார். எனவே, தனுஷின் படங்களுக்கு அவர் இசையமைக்கவில்லை.

அதேநேரம் விஜய், ரஜினி, கமல், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசையமைக்க துவங்கினார். ரஜினியின் பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என எல்லா படங்களுக்குமே அனிருத்துதான் இசை. ஜெயிலர் பட ஹிட்டுக்கு அனிருத் அமைத்த பின்னணி இசை ஒரு முக்கிய காரணம் என ரஜினியே பாராட்டியிருந்தார்.

இந்நிலையில்தான், சமீபத்தில் கூலி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்த பாடலை டி.ராஜேந்தரும், அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த வீடியோவில் அனிருத் செமையாக நடனமும் ஆடியிருக்கிறார். வீடியோ ஆரம்பிக்கும்போதே ‘தலைவருக்கு பண்றோம். தீயா இருக்கணும்’ என அனிருத் சொல்கிறார்.

இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன அசைவுகளை அமைத்திருக்கிறார். அவரோடு சேர்ந்து அனிருத்தும் நடனமாடும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில், வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினி சில பாடல்கள் மற்றும் படங்களில் செய்த ஸ்டைலை அப்படியே காப்பியடித்து கூலி பாடலுக்காக அனிருத் நடனமாடியிருப்பது அதில் தெரிகிறது. இந்த வீடியோவை பலரும் இணயத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அனிருத் ஆடிய ‘சிகிட்டு’ பாடல் யுடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை தாண்டியிருக்கிறது. மேலும், யுடியூப் டிரெண்டிங்கிலும் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா