Connect with us
rahman

Cinema History

ஏ.ஆர்.ரஹ்மானை காப்பி அடித்து தேவா போட்ட அந்த பாடல்!.. அட நம்ம அஜித் பாட்டு!…

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடலை போலவே தேவா போட்ட போட்ட ஒரு பாடல் பற்றி பார்ப்போம்.

சினிமாவில் ஒரு பாடல் ஹிட அடித்தால் அந்த பாடலை போலவே எனக்கும் ஒரு பாடல் வேண்டும் என இசையமைப்பாளர்களிடம் இயக்குனர்கள் கேட்பது என்பது பல வருடங்களாக இருக்கும் ஒரு விஷயம். இது எம்.எஸ்.வி. காலத்தில் இருந்தே இருக்கிறது. அவரிடம் சில ஹிந்தி பாடல்களை சொல்லி அது போல ஒரு பாடல் வேண்டும் என கேட்டார்கள்.

சில இயக்குனர்கள் எம்.எஸ்.வியின் மற்ற பாடல்களை சுட்டிக்காட்டி அது போல வேண்டும் என சொல்வார்கள். இயக்குனர்கள் கேட்பதை கொடுப்பதே இசையமைப்பாளர்கள் வேலை என்பதால் அதை எம்.எஸ்.வியும் செய்து கொடுப்பார். ஆனால், அந்த பாடலை கேட்கும் நமக்கு இது எந்த பாடலில் இருந்து உருவாக்கப்பட்டது என்பது தெரியாது.

இளையராஜாவுக்கும் இது நடந்திருக்கிறது. ஹிட் அடித்த ஒரு ஹிந்தி பாடலை சொல்லி அவரிடம் பாடல் கேட்பார்கள். அவரும் அந்த ஸ்டைலில் மெட்டு போட்டு கொடுப்பார். ஒருகட்டத்தில், ஒரு படத்தில் இளையராஜா உருவாக்கிய பாடலை சுட்டிக்காட்டி அந்த பாட்டு போலவே எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்பார்கள்.

பெரும்பாலும் அந்த பாடல் ஒரே ராகத்தில் இருக்கும். அப்படி பல ஆயிரக்கணக்கான பாடலை இளையராஜா உருவாக்கி இருக்கிறார். 90களில் இளையராஜாவுக்கு போட்டியாக ஏ.ஆர்.ரஹ்மான், தேவா போன்ற இசையமைப்பாளர்கள் வந்து பல படங்களுக்கும் இசையமைத்தார்கள்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை போல தேவா போட்ட ஒரு பாடல் பற்றி பார்ப்போம். பாலச்சந்தர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த திரைப்படம் டூயட். இந்த படத்தில் ‘மெட்டுப்போடு மெட்டுப்போடு’ என்கிற பாடலை கொடுத்திருந்தார் ரஹ்மான். இது ஆனந்த பைரவி ராகத்தில் அமைந்த பாடல்.

பாலச்சந்தரின் சிஷ்யர் இயக்குனர் வஸந்த் ஆசை படத்தை எடுத்தபோது தேவாவிடம் டூயட் பாடலை சொல்லி அது போல வேண்டும் என கேட்க தேவா போட்ட பாடல்தான் ‘கொஞ்சநாள் பொறு தலைவா’. தேவாவின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிடித்த பாடல் இது. ஏ.ஆர்.ரஹ்மான ஒரு உற்சாகத்திற்காகவும், நம்பிக்கை கொடுப்பதற்காகவும் அந்த பாடலை உருவாக்கினார். தேவாவோ காதலியை பார்க்க துடிக்கும் காதலனுக்காக அந்த பாடலை போட்டிருந்தார்.

இசையமைப்பாளர்கள் எல்லோருக்கும் பிடித்த ராகம் ஆனந்தபைரவி. இந்த ராகம் தேவாவுக்கு மிகவும் பிடித்துப்போக விஜயகாந்த் நடித்த திருமூர்த்தி படத்தில் ‘செங்குருவி செங்குருவி காரமடை செங்குருவி’ பாடலையும் அதே ராகத்தில் அமைத்தார். இந்த படமும் 80 கிட்ஸ்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top