விருது விழாவில் இப்படி சொல்லி கூப்பிட்டாங்க!.. மனசு நொந்து பேசிய இசையமைப்பாளர் தேவா..!

by ramya suresh |
விருது விழாவில் இப்படி சொல்லி கூப்பிட்டாங்க!.. மனசு நொந்து பேசிய இசையமைப்பாளர் தேவா..!
X

Music Director Deva: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்தவர் தேவா. இவரது பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அந்த காலத்தில் இருந்த இசையமைப்பாளர்களுக்கு மத்தியில் இவரது இசை தனித்துவமானதாக இருக்கும். 90s களில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக இருந்து வந்த இவர் தன்னுடைய இசையால் மட்டும் இல்லாமல் தன்னுடைய குரலாலும் பலரையும் கட்டி போட்டவர்.

தேவாவின் அறிமுகம்: தமிழ் சினிமாவில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான தேவா அதனை தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்திருக்கின்றார். 400க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்திருக்கும் இவர் பல திரைப்படங்களில் பாடவும் செய்திருக்கின்றார். அதிலும் இவர் ஏராளமான கானா பாடல்களை பாடியவர்.

அன்றைய காலகட்டத்தில் கானா பாடல் என்றாலே தேவாவை தான் ஞாபகப்படுத்துவார்கள். அந்த வகையில் இவர் பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது. தமிழ் சினிமாவில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுக்கு குத்துப் பாடல்களை கொடுத்திருக்கின்றார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கின்றார். நூற்றுக்கணக்கான பக்தி பாடல்களுக்கும் இசையமைத்து இருக்கின்றார்.

தேவாவின் விருதுகள்: இவர் 1989 ஆம் ஆண்டு வைகாசி பொறந்தாச்சு என்ற திரைப்படத்தில் இசையமைத்ததற்காக மாநில விருதை பெற்றார். அதனை தொடர்ந்து வாலி மற்றும் முகவரி போன்ற திரைப்படங்களில் இசையமைத்ததற்கு இவருக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருதும் வழங்கும் வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற தேவா பின்னர் 1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்திற்கு மாநில திரைப்பட விருதை பெற்றார்.

தேவா பட்ட அவமானங்கள்: தற்போது இசை கச்சேரியில் இசையமைப்பாளர் தேவா பிஸியாக இருந்து வருகின்றார். இவர் தான் படங்களில் இசையமைக்க தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் பட்ட அவமானங்களை பற்றி பேசி இருக்கின்றார். ஒரு விருது விழாவிற்கு சென்றால் தத்துவ பாடல்களை இசையமைக்கும் தேவா வருகிறார் பாருங்கள் என்று கூறுவார்கள்.

மேலும் நான் வெஸ்டர்ன் பாடல்களை இசையமைத்தால் அந்த பாடல்களை காப்பி பாடல் என்று குறை கூறுவார்கள். கிராமிய பாடல்களை இசையமைத்தால் இவரை பார்த்து காப்பியடித்தேன் அவரைப் பார்த்து காப்பியடிக்கிறேன் என்று கூறுவார்கள். இதெல்லாம் கேட்கும் போது மனதுக்கு அவ்வளவு வருத்தமாக இருக்கும்.

அதன் பிறகு தான் எனக்கு நானே ஒரு தனி ஸ்டைலை உருவாக்கிக் கொண்டேன். அதுதான் கானா பாடல். பல மேடைகளில் என்னை மட்டப்படுத்தனும் என்பதற்காகவே சில கேள்விகளை எல்லாம் கேட்பார்கள். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும் என்று மனம் நொந்து பேசியிருந்தார் தேவா.

Next Story