Categories: latest news

‘தக் லைஃப்’ நெகட்டிவ் ரிவியூவ்ஸுக்கு காரணம்! பணமோ கதையோ இல்ல.. இவங்கதான்

கடந்த ஜூன் 5 ஆம் தேதி கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் கமல் கிட்டத்தட்ட 37 வருடங்கள் கழித்து அவருடன் இணைந்து பணியாற்றிய திரைப்படமாக தக் லைஃப் அமைந்தது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான நாயகன் திரைப்படம் தமிழ் சினிமாவின் ஒரு கல்ட் கிளாசிக் திரைப்படமாகவே அமைந்திருக்கிறது. மக்கள் மத்தியில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய படமாக நாயகன் அமைந்தது.

அதனால் மீண்டும் கமல் மணிரத்னம் கூட்டணி எனும் போது பெரிய அளவில் எதிர்பார்ப்பை தக் லைஃப் ஏற்படுத்தியிருந்தது. படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் ராஜ்கமல் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்திருந்தது. படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா என பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர்.

படத்திற்கு இசை ஒரு கூடுதல் பலமாக இருந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளே படத்தை பார்த்த ரசிகர்கள் கடுமையான விமர்சித்தனர். எதிர்பார்க்காத விமர்சனத்தை தக் லைஃப் படம் சந்தித்தது. தொடர்ந்து சரிவையே சந்திக்க தொடங்கியது. இது பற்றி பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறும் போது 15 நாள்கள் கழித்து தக் லைஃப் படத்தை பார்க்க சென்றாராம் ஜேம்ஸ் வசந்தன்.

படம் ஆரம்பத்திலிருந்து ஒரு 10 நிமிடம், 20 நிமிடம், ஒரு மணி நேரம் என கடக்கும் போது ‘ஓ இனிமேல்தான் படம் மோசமாக இருக்கப் போதோ’ என்று நினைத்துக் கொண்டே படத்தை பார்த்தாராம். இடைவேளையும் வந்தது. அப்போ இரண்டாம் பாதிதான் படம் மோசமாக இருக்கும் போல என இரண்டாம் பாதியும் வந்து படமும் முடிந்துவிட்டதாம். ஆனால் படத்தில் எதை நன்றாக இல்லை கூறினார்கள் என ஜேம்ஸ் வசந்தன் யோசித்தாராம்.

படம் எல்லாரும் சொல்லும் அளவிற்கு மோசமாக இல்லை. எங்கேயும் தொய்வு இல்லை. அப்பா நினைத்த ஒரு பெண்ணை மகன் அடைய விரும்புவதுதான் ஒரு மாதிரியாக இருக்கிறது என்றால் அது மட்டும் படத்தின் தோல்விக்கான காரணமாக சொல்ல முடியாது. அது படத்தின் ஒரு கதை. அவ்வளவுதான். ஆனால் படம் நன்றாக இருக்கிறது. இருந்தாலும் இவ்வளவு நெகட்டிவ் விமர்சனத்தை படம் சந்தித்ததற்கு ஒரே காரணம் புரோமோஷனில் அதுவும் ப்ரீ ரிலீஸில் அவர்கள் உட்கார்ந்து பேசும் போது நாயகனை விட வேறு ஒன்னு படத்தில் இருக்கிறது என்று சொன்னதுதான்.

vasanthan

படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே இவ்வளவு ஹைப்பை ஏத்தியிருக்க வேண்டாம். மணிரத்னம் படம் என்றாலே அதற்கு புரோமோஷன் வேண்டாம். கமல் படம் என்றாலும் அதற்கும் புரோமோஷன் தேவைப்படாது. அப்படி இருக்கும் போது ஏன் இந்தளவு ஹைப்? அதனால் பேச்சாடா பேசுனீங்க என நினைத்து படம் பார்த்தவர்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர் என ஜேம்ஸ் வசந்தன் கூறினார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago