Categories: Cinema News latest news

அனிருத்தோட 4 படத்தோட பிஜிஎம் சேர்த்தாலும் என்கிட்ட தோத்துப்போயிடும்!.. தமன் சவால்!…

Aniruth songs: சூப்பர்ஸ்டார் ரஜினியின் உறவினர் அனிருத் ரவிச்சந்திரன். கல்லூரியில் படிக்கும்போதே இசையில் ஆர்வம் ஏற்பட்டு சொந்தமாக டியூன் போட துவங்கினார். இசையமைப்பாளர் ஆக வேண்டும் என்பதே அவரின் ஆசையாக இருந்தது. தனுஷுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சொந்தமாக பாடல்களை உருவாக்கினர்கள்.

ஒய் திஸ் கொலவெறி: அப்படி வெளியான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகமெங்கும் பிரபலமானது. தனுஷ் நடித்த 3, தனுஷ் நடிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த எதிர் நீச்சல் மற்றும் காக்கி சட்டை போன்ற படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்தார். அவரின் பாடல்கள் இளசுகளுக்கு மிகவும் பிடித்துப்போனது.

விஜய் படங்கள்: எனவே, விக்னேஷ் சிவன், நெல்சன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களும் தங்களின் படங்களில் அனிருத் பாடல்கள் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். அதோடு, லோகேஷின் மாஸ்டர் படத்தில் அனிருத் கொடுத்த இசையும், பின்னணி இசையும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. எனவே, லோகேஷின் விக்ரம், லியோ போன்ற படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார்.

இந்த இரண்டு படங்களிலுமே பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. விஜய்க்கு மாஸ்டர், பீஸ்டர், லியோ எனவும், அஜித்துக்கு வேதாளம், விவேகம், விடாமுயற்சி படங்களுக்கும், ரஜினிக்கு பேட்ட, தர்பார், ஜெயிலர், வேட்டையன், கூலி போன்ற படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்திருக்கிறார்.

எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மான் பக்கமே நின்ற ஷங்கரே கூட இந்தியன் 2 -வுக்கு அனிருத்தை இசையமைக்க வைத்தார். தற்போது ஏதேனும் பெரிய இயக்குனர் கேட்டால் கூட இன்னும் 2 வருடங்களுக்கு என்னால் எந்த புதிய படத்திலும் இசையமைக்க முடியாது என கையை விரிக்கும் அளவுக்கு பல படங்களை அனிருத் கையில் வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தமன்: இந்நிலையில், பாய்ஸ் படத்தில் நடித்தவரும், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவருமான தமன் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘ ஜெயிலர், விக்ரம், லியோ, பீஸ்ட் இந்த 4 படங்களின் பின்னணி இசையை சேர்த்தாலும் தற்போது நான் இசையமைக்கும் பவன் கல்யாணின் OG படத்தின் பின்னணி இசையிடம் தோற்றுவிடும்’ என சொல்லியிருக்கிறார். விஜயின் வாரிசு படத்திற்கு கூட தமன்தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா