மன்னிப்பு கேட்கும்போதும் நக்கல் அடித்த மிஷ்கின்... மனுஷன் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே!

by sankaran v |
மன்னிப்பு கேட்கும்போதும் நக்கல் அடித்த மிஷ்கின்... மனுஷன் கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலையே!
X

சமீபத்தில் பாட்டல் ராதா படவிழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசியது பெரிய சர்ச்சையாக வெடித்தது. குடிகாரர்களுக்கு அப்படி ஒரு ஆதரவு தரும் வகையில் பேசி இருந்தார். அது மட்டும் அல்லாமல் இளையராஜாவை ஒருமையில் பேசி இருந்தார். சில ஆபாசமான வார்த்தைகளையும் பேச்சின் இடையில் அள்ளி விட்டு இருந்தார்.

சர்ச்சையும் கண்டனமும்: இதையொட்டி அவருக்குப் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் குவிய ஆரம்பித்தன. குறிப்பாக நடிகர் அருள் தாஸ், லெனின் பாரதி, தயாரிப்பாளர் தாணு உள்பட பலரும் அவரைக் கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

செருப்பு வீசி இருப்பேன்: வலைப்பேச்சு பிஸ்மி கூட நான் அந்தவிழாவில் இருக்காமல் போய்விட்டேன் என்பது வேதனையாக உள்ளது. அப்படி இருந்து இருந்தால் நான்தான் முதல் ஆளாக அவர் மீது செருப்பு வீசி இருப்பேன் என்று அதிரடியாகப் பேசி இருந்தார். இந்நிலையில் மிஷ்கின் தற்போது தனது தவறை உணர்ந்து சில வார்த்தைகளைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பாருங்க.

எல்லை மீறி: பாட்டல் ராதா பட விழாவில் நகைச்சுவையாகத் தான் அந்த விஷயத்தைப் பேசினேன். ஒரு சில வார்த்தைகள் எல்லை மீறி சென்று விட்டது. அதற்காக என்னை விமர்சித்த அனைவரிடமும் இந்த தருணத்தில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

முகம் சுழிக்கிற மாதிரி: மேலும் அவர் அன்னிக்கு நான் முகம் சுழிக்கிற மாதிரி பேசியதைக் கேட்டு அமீரும், வெற்றிமாறனும் சிரிச்சாங்கன்னு நிறைய பேர் அவங்களைத் திட்டுறாங்க. ஒரு ஜோக் சொல்லும்போது அதைக் கேட்கிறவங்க ஆழ்மனசுல இருந்துதான் சிரிப்பாங்க. அன்னைக்கு மேடையில் அதுதான் நடந்தது.

இருந்தாலும் அமீர் மற்றும் வெற்றிமாறனிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன். வெற்றி என்ன இப்படி பேச வச்சதுன்னு சொன்னாங்க. வெற்றி என்னோட தலை மீது இருந்திருந்தா நான் பெரிய நடிகர்களோடு படம் பண்ணி இருப்பேன். அதனால மன்னிப்புக் கேட்டுக்குறேன்.

8ம் நம்பர் செருப்பா எரிங்க: பாடலாசிரியர் தாமரை, லட்சுமி ராமகிருஷ்ணன், அருள்தாஸ், லெனின் பாரதி, தயாரிப்பாளர் தாணு எல்லார்கிட்டேயும் மன்னிப்பு கேட்டுக்குறேன். என் மேல் செருப்பு எரியணும்னு சொன்ன நண்பர் தயவுசெஞ்சு ரெண்டு செருப்பா எரிங்க. அதுவும் 8ம் நம்பர் செருப்பா எரிங்கன்னு மன்னிப்பு கேட்டதோடு கொஞ்சம் நக்கலையும் சேர்த்துள்ளார் இயக்குனர் மிஷ்கின்.

Next Story