காலம் கடந்தும் ஒருவரின் புகழ் நிலைத்து நிற்குமானால் அவர் படைத்த படைப்புகளால் மட்டுமே அது சாத்தியமாகும். அந்த வகையில் தமிழர்களின் நெஞ்சங்களில் காலம் கடந்தும் நிலைத்து நிற்கும் கவிஞர்களின் தலையாயவர் கவிஞர் கண்ணதாசன். சினிமா பாட்டு மட்டுமல்லாமல் இலக்கியங்கள் புதினங்கள் நாவல்கள் என எல்லா துறைகளிலும் இவரின் ஈடுபாடு அதிகமாகவே இருந்தன.
தமிழ்நாடு அரசவை கவிஞராகவும் கண்ணதாசன் இருந்திருக்கிறார். புத்தகப் பாடங்களில் இவர் இல்லாமல் நம்மால் கடக்க முடியாது. எல்லா வகுப்பு புத்தகங்களிலும் கண்ணதாசனின் வரலாறு என்பது மிக முக்கியமாகவே கருதப்படுகிறது. நிஜ வாழ்க்கை எப்படி இருந்தாலும் தான் படைக்கும் படைப்புகளை மக்களுக்கு தெள்ளத் தெளிவாக கொடுக்க வேண்டும்.
தன்னுடைய படைப்புகளால் மக்கள் நல்ல ஒரு அறிவைப் பெற வேண்டும் என்பதில் கவனமாக இருந்தாலும், கண்ணதாசன் ‘தன் கவிதைகளை பின்பற்றுங்கள். என்னை பின்பற்றாதீர்கள்’ என்றுதான் பல பேருக்கு அறிவுரை கூறி வந்தாராம். ஏனெனில் கண்ணதாசனை பொறுத்த வரைக்கும் மதுவுக்கு அடிமையானவர் என அனைவருக்குமே தெரியும்.
அதை அவரே சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கண்ணதாசனின் மகன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் கண்ணதாசனை பற்றி யாராவது ஏதேனும் தவறாக கூறியிருந்தாலோ அல்லது அவருடைய சொந்த வாழ்க்கையை பற்றி விமர்சனம் செய்தாலோ அதை வெளியிடும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து அவ்வப்போது அவருடைய மகன் டெலிட் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
அதற்கு அவருடைய மகன் தன் அப்பாவை பற்றி எந்த ஒரு விமர்சனமும் செய்யக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன் என பதில் அளித்தார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் கூறினார். மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு படத்தில் அமைந்த பாடல் ‘கண்ணதாசன் காரைக்குடி பேரச்சொல்லி ஊத்தி குடி’ என்ற ஒரு பாடல் இருக்கும்.
அதை பார்த்ததும் கண்ணதாசனின் மகன் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தாராம். இதை பார்த்ததும் மிஷ்கின் கண்ணதாசனின் மகனை தொடர்பு கொண்டு என்னை மன்னித்து விடுங்கள் எனக் கேட்டதாகவும் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இனிமேல் யாரும் இந்த தவறை செய்யக்கூடாது என்பதற்காகவே நான் வார்ன் செய்கிறேன் எனக் கண்ணதாசன் மகன் கூறினாராம். இல்லையென்றால் அவர்கள் மேல் புகார் செய்து ஃபைல் பண்ணனும் என்று தான் இருந்தாராம். ஆனால் மிஷ்கின் மன்னிப்பு கேட்டதனால் அதை அப்படியே விட்டு விட்டாராம் கண்ணதாசனின் மகன்.
ஷங்கர் இயக்கத்தில்…
Vettaiyan: பொதுவாக…
இயக்குனர் சிறுத்தை…
மகிழ்திருமேனி இயக்கத்தில்…
சுந்தரி சீரியலில்…