ஆண்ட்ரியாவை வச்சு நிர்வாண காட்சி.. அதை மட்டும் செஞ்சிருந்தா?.. மிஷ்கின் உருக்கம்..!

by ramya suresh |
ஆண்ட்ரியாவை வச்சு நிர்வாண காட்சி.. அதை மட்டும் செஞ்சிருந்தா?.. மிஷ்கின் உருக்கம்..!
X

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குனர் மிஷ்கின். ஆனால் சில சமயங்களில் மேடைகளில் சர்ச்சையாக பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வார். அந்த வகையில் சமீபத்தில் பாட்டில் ராதா திரைப்படத்தின் ஆடியோ லான்ச்சில் அதிக அளவு கெட்ட வார்த்தைகளை பேசிய காரணத்தால் தமிழ் சினிமாவை சேர்ந்த பலரும் அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

கொஞ்சம் கூட மேடை நாகரிகம் இல்லாமல் மிஷ்கின் பேசுகின்றார். அனைவரையும் ஒருமையில் பேசுகின்றார் என்று தொடர்ந்து அவருக்கு கண்டனம் தெரிவித்து வந்தார்கள். நடிகர் அருள்தாஸ் தொடங்கி இயக்குனர் லெனின் பாரதி, தயாரிப்பாளர் தாணு, தனஞ்செயன் என பலரும் அவருக்கு எதிராக கண்டனங்களை முன்வைத்து வந்தார்கள்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் நேற்று நடைபெற்ற பேட் கேர்ள் என்ற திரைப்படத்தின் விழாவில் கலந்து கொண்டார். இந்த திரைப்படத்தை அனுராக் காஷ்யப்பும், வெற்றிமாறனும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களுடைய கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது.

இப்படத்தின் விழாவில் மிஷ்கினும் கலந்து கொண்டு பேசி இருந்தார். அதில் தனக்கு கண்டனங்களை தெரிவித்த அனைவரிடமும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியிருந்தார். நான் அந்த விழாவில் வேண்டுமென்றே அப்படி பேசவில்லை. ஒரு புளோவில் தன்னை அறியாமல் சில வார்த்தைகள் வந்துவிட்டது. தன்னை விமர்சித்த தனக்கு கண்டனம் தெரிவித்த அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என்று ஓபனாக பேசினார் மிஷ்கின்.

அதனை தொடர்ந்து பேசிய அவர் பிசாசு 2 திரைப்படம் குறித்தும் அதில் நடிகை ஆண்ட்ரியாவின் நிர்வாணமாக நடிக்க வைத்தது குறித்தும் மனம் திறந்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'முதலில் பிசாசு 2 திரைப்படத்தில் என் குழந்தை ஆண்ட்ரியாவிடம் கதையை கூறினேன். அவரிடம் கதையை கூறும்போதே இந்த திரைப்படத்தில் நிறைய நிர்வாணமான காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும் என்று ஓபனாக சொல்லிவிட்டேன்.

கதையை கேட்டு மிகவும் பிடித்துப் போன காரணத்தால் ஆண்ட்ரியா அந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து டெஸ்ட் சூட் எடுக்க வேண்டும் என்று சொன்னேன். அதற்காக என்னுடைய உதவி இயக்குனர் ஈஸ்வரி என்பவரை அழைத்துக் கொண்டு நானும் ஆண்ட்ரியா வீட்டிற்கு சென்றிருந்தோம். என் மீது இருந்த நம்பிக்கை காரணமாக அவர் ரூமுக்குள் சென்று விட்டு திரும்ப வந்தார்.

ஆனால் அவர் வரும்போது நான் அங்கு இல்லை. அவர் வீட்டின் வெளியில் வந்து சிகரெட் பிடித்துக் கொண்டு நீண்ட யோசனைக்கு பிறகு அங்கிருந்து ஆஃபீஸ் சென்றுவிட்டேன். கொஞ்ச நேரம் கழித்து ஆண்ட்ரியாவிடம் இருந்து போன் வந்தது. நீங்கள் இங்கு இல்லையே? எங்கு சென்றீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு நான் உனது நிர்வாண புகைப்படத்தை என் படத்தில் வைத்தேன் என்றால் எல்லோரும் என்னை போல் அதை ஒரு இலக்கிய நயத்தோடு பார்ப்பார்கள் மற்றும் தாய்மை உணர்வோடு பார்ப்பார்கள் என்று என்னால் சொல்ல முடியாது. நிச்சயம் வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள். அதை இன்றைய இளைஞர்களுக்கு ஒரு தவறான கண்ணோட்டமாக அமையும். அதனால் அது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

ஒருவேளை அந்த புகைப்படத்தை மட்டும் நான் என் படத்தில் பயன்படுத்தி இருந்தால் மிகப்பெரிய கூட்டம் வந்திருக்கும். படம் ரிலீஸாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும். தற்போது அந்த திரைப்படம் கேன்ஸ் விழாவில் ஒளிபரப்பாகி இருக்கும். ஆனால் நான் அதை செய்யவில்லை என்று ஓபனாக பேசியிருந்தார் மிஷ்கின். இந்த பேட்டியானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

Next Story