கெட்ட வார்த்தை பேச மாட்டேன்னு சொன்ன அடுத்த நிமிஷமேவா!.. மேடையில் சம்பவம் செய்த மிஷ்கின்..!

by ramya suresh |
கெட்ட வார்த்தை பேச மாட்டேன்னு சொன்ன அடுத்த நிமிஷமேவா!.. மேடையில் சம்பவம் செய்த மிஷ்கின்..!
X

Director Mysskin: தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பவர் இயக்குனர் மிஷ்கின். தொடர்ந்து படங்களை இயக்கி வந்த மிஷ்கின் தற்போது மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் கடைசியாக பாலா இயக்கத்தில் வெளிவந்த வணங்கான் திரைப்படத்தில் நீதிபதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது டிராகன் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றார்.

டிராகன் திரைப்படம் : இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோஹர், வி.ஜே. சித்து, ஹர்ஷத், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா அல்ல ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் டிராகன். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருக்கின்றார். இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள்.

டிராகன் ஆடியோ லான்ச்: டிராகன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் படத்தில் நடித்திருந்த அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டிருந்த நிலையில் விக்னேஷ் சிவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் மிஸ்கின் தன்னுடைய பேச்சால் அனைவரையும் சிரிக்க வைத்திருந்தார்.

அதில் அவர் பேசியிருந்ததாவது ' நான் நிச்சயம் மேடையில் கெட்ட வார்த்தை பேசப்போவதில்லை. பாட்டில் ராதா நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு வருடத்திற்கு எந்த ஒரு மேடை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை ஒன்றை பேசி இருந்தார். இதைக் கேட்ட அனைவரும் சிரித்தார்கள்.

அதனை தொடர்ந்து பேசிய மிஷ்கின் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதற்கு மூன்று பேர் காரணமாக இருக்கிறார்கள். ஒன்று ஏஜிஎஸ் நிறுவனம், மற்றொன்று அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன். இந்த மூன்று பேருக்காக தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். பிரதீப் ரங்கநாதன் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக வருவார்.

எந்த அலட்டலும் இல்லாமல் பந்தாவும் இல்லாமல் நட்பாக இருக்கக்கூடிய ஒரு நபர் பிரதீப். அவர் இன்னும் சண்டை படம் எதுவும் செய்யத் தொடங்கவில்லை. விரைவில் ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன். இந்த படத்தில் பிரதீப்புக்கு வில்லனாக நடித்திருக்கின்றேன். நல்ல வில்லன் தான் பயப்பட வேண்டாம். இயக்குனர்களுக்கு மிகவும் சவுரியமான நடிகராக பிரதீப் இருக்கின்றார்.

இதை அவருக்கு ஐஸ் வைக்க வேண்டும் என்று கூறவில்லை. இவரைப் பற்றி பெருமையாக பேசும் போதெல்லாம் என்னுடைய உதவி இயக்குனர்கள் என்னிடம் அவர் என்ன பெரிய வெங்காயமா? என கேட்பார்கள். நான் உடனே அவன் பெரிய வெங்காயம் தான் என்று கூறுவேன். இப்போது இருக்கும் இந்த குணத்துடனே இருந்தால் இன்னும் 50 ஆண்டுகள் என்றாலும் உனக்கு வெற்றிகள் குவிந்து கொண்டே இருக்கும் என்று அந்த பேசியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

Next Story