களைக்கட்டிய நாகர்ஜூனா வீடு.. கசிந்த சைதன்யா- சோபிதா திருமண அப்டேட்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:29  )

Naga Chaitanya Sobhita: நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா திருமணம் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் தான் நடிகர் நாக சைதன்யா. தெலுங்கில் பிரபலமான அக்கினி குடும்பத்தில் நடக்க இருக்கும் திருமணம் என்பதால் மீண்டும் நாகர்ஜூனா வீடு களைகட்டி இருக்கிறது. நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த சைதன்யா சோபிதாவை டேட்டிங் செய்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கசிந்து வந்தது. இரு தரப்பும் இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் இருக்க சமீபத்தில் இவர்களின் நிச்சயதார்த்த விழா கோலாகலமாக நடந்தது. இதன் அறிவிப்பை நடிகர் நாகார்ஜுனா அதிகாரப்பூர்வமாக தன்னுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடிகை சோபிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண சடங்கு குறித்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இதற்கு சோபிதா கோதுமா ராயி பசுபு டஞ்சதம் எனக் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இது தெலுங்கு மரபு படி திருமண விழா தொடங்குவதன் முதல் சடங்கு எனக் கூறப்படுகிறது.

பசுப்பு டஞ்சதம், பசுப்பு கொண்டாட்டம் என்றும் அழைக்கப்படும். இது தெலுங்கு பழக்க வழக்கங்களில் பின்பற்றப்படும் ஒரு விழாவாகும். விழாவில், பாரம்பரிய முறையில் கல் கிரைண்டர் கொண்டு மஞ்சள் அரைக்கப்படுகிறது. இது ஹல்டி விழாவிற்கு சமம் எனவும் கூறப்படுகிறது.

புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவர்கள் திருமண தேதி குறித்த ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. இந்நிலையில் இவர்கள் திருமணம் டிசம்பர் மாத முதல் வாரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேதி மற்றும் லொகேஷன் குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் கசிந்திருக்கிறது.


Next Story