நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்தில் 'டிவிஸ்ட்'

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:06  )

Naga Chaitanya sobitha wedding date: இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணங்களில் டோலிவுட் நடிகர் நாக சைதன்யாவின் திருமணமும் ஒன்று. தென்னிந்தியாவின் முன்னணி நடிகை சமந்தாவை காதலித்து 2017ம் ஆண்டு மணம் முடித்த சைதன்யா 2021ம் ஆண்டு அவரை பிரிந்தார். இந்த நட்சத்திர ஜோடியின் பிரிவு ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களையும் அதிர வைத்தது.

இதையடுத்து அவரைப்பற்றி பல்வேறு வதந்திகள் உலா வந்தன. அதில் 'பொன்னியின் செல்வன்' நாயகி சோபிதாவுடன் டேட்டிங் செய்கிறார் என்பதும் ஒன்று. தற்போது அனைத்தும் வெட்ட வெளிச்சமாகி சைதன்யா-சோபிதா காதல் திருமணத்தில் வந்து நிற்கிறது.

சமந்தா இன்னும் சிங்கிளாக இருக்க சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு ஜம்மென தயாராகி விட்டார். சமந்தாவை பிரிந்த ஒரே ஆண்டில் சோபிதாவை பார்ட்டி ஒன்றில் சந்தித்த சைதன்யா அவருடன் இரண்டு ஆண்டுகள் நெருங்கி பழகி தற்போது அதிகாரப்பூர்வமாக திருமணத்தையும் அறிவித்து இருக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் எப்போது என்பதை அறிவிக்கவில்லை. இந்தநிலையில் இவர்கள் திருமணம் ஹைதராபாத்தில் டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அங்குள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் பிரமாண்டமாக செட் போட்டு திருமணத்தை நடத்திட நாகார்ஜுனா குடும்பத்தார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மிகவும் தடபுடலாக நடைபெற இருக்கும் இந்த திருமணத்தில் மிகவும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களை அழைக்க திட்டமிட்டு இருக்கின்றனராம்.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரண்மனையில் சைதன்யா-சோபிதா திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஹைதராபாத்திலேயே திருமணம் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story