500 கோடி செலவு எதுக்கு?.. நல்ல கதை பண்னுங்க!.. இந்தியன் 2-வை சொல்கிறாரா நமீதா?!...

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக ரசிகர்களை கவர்ந்தவர்தான் நமீதா. ‘அர்ச்சுனா அர்ச்சுனா’ என அருவியில் சரத்குமாருடன் நமீதா ஆடிய போது இளசுகள் முதல் பெருசுகள் வரை கிறங்கிப்போனார்கள். நல்ல உயரம், கட்டுடல் என ரசிகர்களை சொக்க வைத்தார். அஜித் நடித்த பில்லா படத்தில் பிகினியில் வந்த நமீதா பலரின் தூக்கத்தையும் கெடுத்தார்.

‘அழகிய தமிழ் மகன்’ படத்தில் வில்லன் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இவரின் முதல் படமே விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ படம்தான். சரத்குமாருடன் அதிக படங்களில் நடித்த நடிகை இவர். பார்த்திபனுக்கு ஜோடியாக பச்சைக்குதிரை படத்தில் நடித்தார்.

ஒருகட்டத்தில் ஓவர் வெயிட் போட்டு அவரின் தோற்றம் மாறியது. எனவே, சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போனது. எனவே, சின்னத்திரை பக்கம் சென்று மானாட மயிலாட நிகழ்ச்சியில் ஜட்ஜாக இருந்தார். ரசிகர்களை மச்சான்ஸ் என அழைப்பது நமீதாவின் வழக்கம்.

இவரின் சொந்த மாநிலம் குஜராத் என்றாலும் தமிழ் சினிமாவில் நடிப்பதிலேயே இவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நமீதா அரசியலிலும் இறங்கினார்.

இந்நிலையில், நர்கார்பூர் எனும் ஒரு திரைப்படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நமீதா ‘இயக்குனருக்கு 50 கோடியும், பல நூறு கோடி பட்ஜெட்டிலும் படம் எடுக்க தேவையில்லை. தமிழ் ரசிகர்களுக்கு மனதை தொடும் கதை இருந்தால் போதும். எனவே, நல்ல கதைகளை படமாக எடுக்கலாம்.

நர்கார்பூர் படம் விளையாட்டை மையமாக கொண்டது. தற்போது இந்தியாவில் விளையாட்டு துறையில் பலரும் சாதித்து வருகிறார்கள். இந்தியாவில் ஒரு பெண் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் வெற்றி பெற்றுள்ளார். இது தமிழ்நாட்டுக்கு பெருமை’ என அவர் பேசினார். நமீதா மறைமுகமான சொன்னது இந்தியன் 2 படத்தைத்தான் என சொல்லி வருகிறார்கள் ரசிகர்கள்.

Next Story