விஜய் ஆசைப்பட்டும் பார்த்திபன் இயக்காமல் போன திரைப்படம்! ஐயோ இந்த சூப்பர் ஹிட் படமா?
கோலிவுட்டில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் .லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் இப்போது அரசியலிலும் தனது அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பித்திருக்கிறார். தற்போது விஜய் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு அடுத்தபடியாக எச் வினோத்துடன் ஒரு புதிய படத்தில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது .
ஒவ்வொரு காலகட்டத்திலும் விஜயின் வளர்ச்சி என்பது அனைவரையும் பிரமிக்க வைத்ததாகவே இருக்கிறது. அந்த அளவுக்கு தன்னை மெருகேற்றி வருகிறார் விஜய். ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்த விஜய் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகத்தான் இன்று அவருடைய இந்த வளர்ச்சி பார்க்கப்படுகிறது.
இந்த அளவு ஒரு அபார வளர்ச்சி அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய் தான் இருக்கிறார் .அந்த இடத்தை இன்று வரை யாராலும் எட்ட முடியவில்லை. இந்த நிலையில் விஜய் வைத்து தான் ஒரு படம் பண்ண இருந்ததாகவும் அதை விஜயே ஆசைப்பட்டு கேட்டதாகவும் நடிகர் பார்த்திபன் கூறியிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் அவரை ஒரு நல்ல அந்தஸ்தில் உட்கார வைக்க வேண்டும் என ஒவ்வொரு இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தார் எஸ் ஏ சந்திரசேகர். அந்த வரிசையில் பார்த்திபனும் அடங்குவார். ஏனெனில் பார்த்திபனிடமும் எஸ் ஏ சந்திரசேகர் ‘உங்க படத்தில் ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரமானாலும் என் பையனுக்கு ஒரு சான்ஸ் கொடுங்கள்’ என கேட்டதாக ஒரு பேட்டியில் பார்த்திபனே சொல்லி இருக்கிறார்.
அதன் பிறகு அவருடைய வளர்ச்சி எந்த அளவு போனது என அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு ஒரு சமயம் பார்த்திபன் விஜயை சந்தித்து ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் அது விஜய்க்கு திருப்திகரமாக இல்லையாம். இப்படி தனக்கும் விஜய்க்குமான ஒரு பிணைப்பை பற்றி பார்த்திபன் அந்த பேட்டியில் கூறினார்.
அது மட்டும் அல்லாமல் நண்பன் படத்தை நீங்கள்தான் இயக்க வேண்டும் என விஜய் பார்த்திபனிடம் கேட்டாராம். இவரும் சரி என சொல்ல அந்த நேரத்தில் இந்த நண்பன் படத்தை சங்கர் பண்ணினால் இன்னும் பிரமாதமாக இருக்கும் என யாரோ சொல்ல அந்த வாய்ப்பு என்னை விட்டுப் போனது என பார்த்திபன் கூறியிருக்கிறார். ஏனெனில் ஷங்கர் விஜய் கூட்டணி எனும் போது பிசினஸ் அளவில் அது இன்னும் ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தும் என்ற ஒரு காரணத்தினாலேயே என்னால் அந்தப் படத்தை பண்ண முடியவில்லை என பார்த்திபன் கூறினார்.