Napoleon: ஜப்பானில் கல்யாணம்!... வருங்கால மனைவியுடன் ரொமான்ஸில் நெப்போலியன் மகன்... வைரல் வீடியோ..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:21  )

தமிழ் சினிமாவில் 80'ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே அரசியலில் களம் இறங்கி அரசியல்வாதியாகவும் தன்னை நிரூபித்தவர். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவரின் சிகிச்சைக்காக இந்தியாவில் இருந்து குடும்பமாக அமெரிக்காவிற்கு குடி பெயர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கேயே விவசாய நிலம், ஐடி கம்பெனி என தொடங்கி செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். இந்நிலையில் அவரது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நடிகர் நெப்போலியன் முடிவு செய்து இருக்கின்றார்.

இதனால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்கின்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களது திருமணம் தற்போது ஜப்பானில் நடைபெற உள்ளது. நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஏராளமான பிரபலங்கள் தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே கலா மாஸ்டர், மீனா, சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் ஜப்பானுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. மேலும் திருமணத்திற்கு முன்பு கொண்டாடப்படும் சங்கீத், ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஜப்பானில் நடைபெற இருக்கும் நெப்போலியன் மகன் திருமணத்திற்கு பிரபலங்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நாளை நடைபெற இருக்க திருமணத்திற்கு முன்பு நெப்போலியன் மகன் தனுஷிம், அக்ஷயாவும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் பர்பிள் கலர் உடையில் ஜோடியாக வளம் வரும் வீடியோ இடம்பெற்று இருக்கின்றது. மணமகள் அக்ஷயா பேச தனுஷ் வெட்கப்படுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.


Next Story