Categories: latest news

Napoleon: ஜப்பானில் கல்யாணம்!… வருங்கால மனைவியுடன் ரொமான்ஸில் நெப்போலியன் மகன்… வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் 80’ஸ் காலகட்டத்தில் பிரபல நடிகராக வளம் வந்தவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தபோதே அரசியலில் களம் இறங்கி அரசியல்வாதியாகவும் தன்னை நிரூபித்தவர். அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதில் மூத்த மகனான தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.

அவரின் சிகிச்சைக்காக இந்தியாவில் இருந்து குடும்பமாக அமெரிக்காவிற்கு குடி பெயர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கேயே விவசாய நிலம், ஐடி கம்பெனி என தொடங்கி செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன். இந்நிலையில் அவரது மகன் தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நடிகர் நெப்போலியன் முடிவு செய்து இருக்கின்றார்.

இதனால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்கின்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களது திருமணம் தற்போது ஜப்பானில் நடைபெற உள்ளது. நாளை திருமணம் நடக்க உள்ள நிலையில் ஏராளமான பிரபலங்கள் தமிழகத்திலிருந்து ஜப்பானுக்கு படையெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஏற்கனவே கலா மாஸ்டர், மீனா, சரத்குமார், ராதிகா உள்ளிட்டோர் ஜப்பானுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தன. மேலும் திருமணத்திற்கு முன்பு கொண்டாடப்படும் சங்கீத், ஹல்தி, மெஹந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை கலா மாஸ்டர் பொறுப்பேற்று நடத்தி வருகின்றார்.

தொடர்ந்து இந்தியாவில் இருந்து ஜப்பானில் நடைபெற இருக்கும் நெப்போலியன் மகன் திருமணத்திற்கு பிரபலங்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க நாளை நடைபெற இருக்க திருமணத்திற்கு முன்பு நெப்போலியன் மகன் தனுஷிம், அக்ஷயாவும் போட்டோ சூட் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இருவரும் பர்பிள் கலர் உடையில் ஜோடியாக வளம் வரும் வீடியோ இடம்பெற்று இருக்கின்றது. மணமகள் அக்ஷயா பேச தனுஷ் வெட்கப்படுகின்றார். இந்த வீடியோ தற்போது இணையதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ராம் சுதன்

Recent Posts

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

23 minutes ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

53 minutes ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

3 hours ago

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

6 hours ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

18 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

19 hours ago