நயனுக்கு இப்படி ஒரு தம்பியா? புகைப்படத்தை போட்டு பல்பு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார்

by ராம் சுதன் |

கவின் நயன்தாரா நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி நேற்று இணையதளத்தில் வைரலானது. விஜய் எடவன் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படத்தில் நயன் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாக ஏற்கனவே செய்தி வெளியானது. அப்பொழுதே ரசிகர்கள் 34 வயதாகும் கவினுக்கு அவரை விட 5 வயது மூத்த நயன் ஜோடியா என பேசி வந்தனர். ஆனால் படத்திக் கதையே அதுதானாம்.

அதாவது தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண் மீது காதல் கொள்ளும் கதாபாத்திரத்தில் தான் கவின் நடிக்கிறாராம். ஆனால் ஆரம்பத்தில் கவின் படத்தில் நயன் என்று அறிவிப்பு வெளியானதும் ஒருவேளை அக்கா போன்ற கதாபாத்திரமாக கூட இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு அடிபட்டது. ஆனால் நேற்று வெளியான அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

அந்தப் புகைப்படத்தில் கவினும் நயனும் நெருக்கமாக இருப்பது போல் போஸ் கொடுத்திருந்தனர். கொஞ்சம் கூட கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதற்கு இடையில் ரசிகர் ஒருவர் இந்தப் புகைப்படத்தை பார்த்து ‘ நயனுக்கு கடைசி தம்பி போல இருக்கிறது’ என கமெண்ட் அடித்திருந்தார். அதுவும் முதல் தம்பி என்று கூட சொல்லவில்லை.

கடைசி தம்பி என்று சொன்னதுதான் பெரிய ட்விஸ்டாக இருந்தது. அந்தளவுக்கு வயது வித்தியாசம் போஸ்டரிலேயே தெரிகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் படமுழுக்க எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது என தெரியவில்லை. டாடா படத்திற்கு பிறகு கவின் நடித்து வெளியான ஸ்டார் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதனால் விஜய் எடவன் இயக்கப் போகும் இந்தப் படத்தில் கமிட் ஆனார்.

கூடவே நயனும் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி படத்திற்கு மேலும் ஹைப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். ஆரம்பமே இப்படி என்றால் இன்னும் என்னெல்லாம் நடக்கப் போகிறதோ என தெரியவில்லை. மேலும் நயனும் பெரிய அளவில் திருமணத்திற்கு பிறகு வெற்றியை கொடுக்கவில்லை.

அதனால் இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான கேரக்டரில் நடிக்க உள்ளதால் இந்தப் படம் அவர் கெரியரில் மிகவும் முக்கியத்துவமான படமாக இருக்கும் என்று சொல்லலாம். இருந்தாலும் நயன் கைவசம் மண்ணாங்கட்டி போன்ற பல படங்கள் இருக்கின்றன.

Next Story