Categories: latest news

ராக்காயி என்ன ஆனாங்கனே தெரியலயே.. டீலில் விட்ட நயன்தாரா.. இதான் விஷயமா?

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் தற்போது அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு அவர் நடித்து வெளியான படங்கள் சுமாரான வரவேற்பையே பெற்றிருக்கிறது. அதற்கு முன்பு வரை நயன்தாரா படங்கள் என்றால் அதுக்கு என ஒரு தனி மார்க்கெட் இருந்தது. ஆனால் அது சமீப காலமாகவே குறைந்து வருகிறது.

இந்த நிலையில் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் நயன்தாராவும் இருக்கிறார். அவரை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க காரணம் பெண்களை மையப்படுத்தி எடுக்கும் படங்களில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு அவருக்கு கிடைத்ததனால் அதன் பிறகு தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற ஒரு பட்டம் வந்தது.

அதனால் மீண்டும் அப்படிப்பட்ட ஒரு படத்தில் நடிக்க முடிவு எடுத்து ராக்காயி என்ற படத்தில் ஒப்பந்தமானார். அந்தப் படத்தின் டீசர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் டீசர் வெளியானத்துடன் சரி அந்த படத்தைப் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஏன் அந்த படத்தின் படப்பிடிப்பு கூட ஆரம்பிக்கவில்லை. இதற்கிடையில் நயன்தாரா மூக்குத்தி அம்மன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.

ராக்காயி திரைப்படத்தில் அவர் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஒரு ஆக்சன் ஹீரோயினாக மீண்டும் அவருக்கு என ஒரு மார்க்கெட் வந்துவிடும். ஆனால் ஏன் அந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் அனைவரின் கேள்வியாக பார்க்கப்படுகிறது .இதற்கு இன்னொரு காரணம் ராக்காயி படத்தை பொருத்தவரைக்கும் குறைவான சம்பளத்தில் தான் நயன்தாரா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

rakkayie

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னொரு பக்கம் சிரஞ்சீவியின் ஒரு படத்திலும் நடிக்க இருக்கிறார். இந்த வருட கடைசி வரைக்கும் சிரஞ்சீவி படத்தில் பிஸியாக இருப்பாராம். அதற்கு அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 15 கோடி என சொல்லப்படுகிறது. அதனால் தான் சம்பளத்தின் அடிப்படையில் கூட நயன்தாரா முதலில் இந்த இரு படங்களை முடித்துவிட்டு அதன் பிறகு ராக்காயி திரைப்படத்தை பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாரா என தெரியவில்லை என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

8 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

10 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

10 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

11 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

12 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

18 hours ago