Categories: Cinema News latest news

நீதான் என் ஆத்மா.. வேறென்ன வேண்டும்!. விக்கியிடம் உருகும் நயன்தாரா!.. போட்டோ பாருங்க!..

Nayanthara: ஐயா படம் மூலம் அறிமுகமான நயன்தாரா அதன்பின் படிப்படியாக பல படங்களிலும் நடித்து நம்பர் ஒன் நடிகையாக மாறி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தனது திரை வாழ்வில் பல பரபரப்பான விஷயங்களில் அடிபட்டவர் இவர். துவக்கத்தில் சரியான வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும் ராஜா ராணி படத்திற்கு இவரின் கெரியர் மாறியது.

ஒருகட்டத்தில் ரசிகர்கள் இவரை லேடி சூப்பர்ஸ்டார் எனவும் அழைக்க துவங்கினார்கள். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவரும் செய்த ரொமான்ஸ் செய்ததால் படத்தின் படப்பிடிப்பு நீண்டு கொண்டே போனது. இதனால் கடுப்பான அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் இனிமேல் இப்படத்திற்கு நான் செலவு செய்ய மாட்டேன் என சொல்லிவிட நயன்தாராவே மீதி பணத்தை கொடுத்து படத்தை முடிக்க உதவி செய்தார்.

விக்கியும், நயன்தாராவும் சில வருடங்கள் காதல் ஜோடிகளாக ஜாலியாக ஊர் சுற்றி வந்தார்கள். வெளிநாடுகளில் ஊர் சுற்றும் புகைப்படங்களையும், ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களையும் விக்கி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். மேலும், நயன்தாராவுக்கு பிறந்தநாள் வந்தால் கவிதையாக ‘தங்கமே’ என உருகி வாழ்த்து சொல்லி வந்தார்.

2022 ஜூன் 9ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும், வாடகைத்தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள். குழந்தைகள் வந்தபின் நயன்தாரா முன்பு போல சினிமாவில் அதிகம் நடிப்பதில்லை. இப்போது சுந்தர்.சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இன்று அவர்களுக்கு திருமண நாள் என்பதால் விக்கியோடு ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து தனது கணவருக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார் நயன்தாரா. நம் இருவரில் யார் அதிகமாக அன்பு செய்கிறோம் என்கிற கேள்வி உனக்குள் இருக்கிறது. ஆனால், இதுவரை உனக்கு பதில் கிடைக்கவில்லை. நீதான் நான் விரும்பும் என் ஆன்மா. இரண்டு பேர் இப்போது 4 பேர் ஆகிவிட்டோம். வேறென்ன வேண்டும்?.. காதல் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு நீ காட்டினாய்., திருமண நாள் வாழ்த்துக்கள் பார்ட்னர். உன்னை எப்போதும் நேசிக்கிறேன்’ என உருகியிருக்கிறார்.

Published by
சிவா