மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் எட்டு பேர் கொண்ட குழு இன்று கரூருக்கு சென்று ஆய்வு செய்ய உள்ளது. கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட பேரணியில் கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கி உயிரிழந்தனர் .இந்த அசம்பாவிதத்திற்கு யாரெல்லாம் காரணம் ? உண்மையில் என்ன நடந்தது? இதற்கு முழுக்க முழுக்க யார் பொறுப்பு என்ற வகையில் பல அரசியல் கட்சி தலைவர்கள் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் உண்மையில் என்ன நடந்தது? இதற்கு யார் காரணம் என்பதை ஆராய மதுரா எம்பி ஹேமமாலினி தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு இன்று கரூருக்கு புறப்படுகிறார்கள். விஜயின் தவெக கட்சி சார்பாக நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் இறந்திருக்கின்றனர். 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருக்கின்றனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமறைவாகிவிட்டார் என்று செய்திகள் வெளி வந்தன.
ஆனால் இப்போது அவர் சேலத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கரூர் மாவட்ட நிர்வாகிகள் இரண்டு பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். அதனால் புஸ்ஸீ ஆனந்த் முன் ஜாமின் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக தலைவர் ஜே பி நட்டாவால் அமைக்கப்பட்ட அந்த குழுவில் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரிட்ஜ் லால், அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, சிவசேனாவின் ஸ்ரீகாந்த் மற்றும் புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இந்த குழுவில் அடங்குவர்.
அங்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்த பிறகு இந்தக் குழு விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எல் முருகன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோர் கரூர் சென்று அங்கு இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அவர்களுக்கு தங்கள் ஆறுதல்களை தெரிவித்தனர். கரூரில் நடந்த இந்த சம்பவம் ஒரு பெரிய துயரமான சம்பவம். இதற்கு முன் எந்த ஒரு அரசியல் சார்ந்த நிகழ்வுகளிலும் இப்படி உயிர் சேதம் நடந்ததே கிடையாது.
இந்த நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது பிரிவு 115 மற்றும் 110, 125, 223 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .டெல்லியில் இருந்து வந்த அமைச்சர் நட்டா பேசும்பொழுது நாங்கள் வந்ததற்கான காரணத்தை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
இது ஒரு சீரியஸான மேட்டர். எட்டு பேர் இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் எட்டு பேரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு குடும்பங்களையும் சந்திக்க எங்களுக்கு நேரம் போதாது. இருந்தாலும் பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களின் குடும்பங்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து கரூரில் நடந்த சம்பவத்தை பற்றி விசாரிக்க உள்ளோம். யார் மேல் தவறு உள்ளது? அதற்கு யார் காரணம் என்பதை பற்றி முழுமையாக ஆராய்ந்த பிறகு உங்களுக்கு நாங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கிறோம் என கூறினார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…