யுடியூப் ஹிட்டுன்னாலே தனுஷ்தான்!.. NEEK கோல்டன் ஸ்பேரோ பாடல் செய்த சாதனை!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:15  )

Neek movie song: யுடியூப்பில் தமிழ் பாடல்கள் ஹிட் அடிக்க துவங்கியதை துவக்கி வைத்தவர் தனுஷ்தான். அனிருத் சினிமாவில் பிரபலமாவதற்குக் முன்பு அவரும் தனுஷும் இணைந்து ஒய் திஸ் கொலவெறி பாடலை உருவாக்கினார்கள். இந்த பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் இந்த பாடலை பலரும் ரசித்தனர். உலகமெங்கும் பலரும் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டனர். அதன்பின் இந்த பாடல் தனுஷை வைத்து ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்திலும் வைக்கப்பட்டது. ஆனால், ஆல்பம் அளவுக்கு படத்தில் இந்த பாடல் பிரபலமாகவில்லை.

யுடியூப்பில் அதிகம் பேர் பார்க்கப்பட்ட பாடலாக ஒய் திஸ் கொல வெறி பாடல் இருந்தது. அதன்பின், அந்த சாதனையை தனுஷே முறியடித்தார். அவரின் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடலை யுடியூப்பில் 10 கோடிக்கும் மேல் பார்த்து ரசித்தார்கள்.

இப்போது வரை அதிகம் பேர் யுடியுப்பில் பார்த்து ரசித்த தமிழ் சினிமா பாடலாக ரவுடி பேபி பாடல் இருக்கிறது. சமீபகாலமாக தனுஷ் திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கேப்டன் மில்லருக்கு பின் ராயன் படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.

அதன்பின் தனது சகோதரி மகன் முக்கிய வேடத்தில் நடிக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை இயக்கினார். இந்த படம் முடிவுக்கு வந்துவிட்டது. இதன் மற்ற வேலைகள் நடக்கும்போதே இட்லி கடை என்கிற படத்தை இயக்க துவங்கிவிட்டார். இந்த படத்தில் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் இடம் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலை யுடியூப்பில் 5 கோடி பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஆல்பத்திற்காக இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story