மீண்டும் அடித்து ஆடும் தனுஷ்… இன்னொரு உலக லெவல் ட்ரெண்டுக்கு ரெடியாம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:11  )

Dhanush: நடிகர் தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் செய்திருக்கும் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் போட்டிருக்கும் எக்ஸ் பதிவு வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், தொடர்ச்சியாக எல்லா மொழி திரைப்படங்களிலும் நடித்து ஹிட் அடித்து வருகிறார். நடிப்பு ஒரு பக்கம் என பிசியாக சென்று கொண்டிருந்தாலும் சமீபகாலமாக அவருடைய பயணம் டைரக்ஷன் பக்கம் திரும்பி இருக்கிறது.

அந்த வகையில் சில வருட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் ராயன் திரைப்படம் வெளியானது. காளிதாஸ் ஜெயராம், சந்திப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் முன்னணி வேடத்தில் நடித்திருக்க தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார்.

2024 ஆம் ஆண்டில் எல்லா படங்களும் மோசமான தோல்வியை தழுவியது. அந்த வகையில் இந்த வருடத்தின் முதல் வெற்றி படமாக ராயன் அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய வசூல் இல்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனுஷ் இள நடிகர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அது மட்டுமல்லாமல் அவருடைய நடிப்பில் இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு படங்களின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் நிலவுக்கு என் மேல் என்னடி போகும் திரைப்படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து வைரல் ஆகி வரும் இந்த பாட்டை தொடர்ந்து அடுத்த சிங்கிள் ரெடியாகிவிட்டதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த முறை இது தனுஷின் சூப் சோனாக இருக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் இப்பாடல் வெளியிடப்படலாம் எனவும் கூறப்பட்டிருக்கிறது. 3 திரைப்படத்தில் ஒய் திஸ் கொலவெறி என்ற சூப் பாடல் உலகமெங்கும் ஹிட் கொடுத்தது.தற்போது மீண்டும் தனுஷ் தன்னுடைய அடுத்த கட்ட ஹிட் பாடலுக்கு தயாராகிவிட்டதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Next Story