இரண்டு இலக்க கோடியா? நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 சம்பளம் இவ்வளவா?
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் ஜெயிலர் 2 படத்தில் அவருக்கு சம்பளம் இரண்டு இலக்க கோடிகள் என்பது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பால் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு தொடங்கியதுதான் பிரச்சினை.
பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்கு நிறைய நாள் இல்லை என கூறப்படுகிறது. இதனால், போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளுக்கு அவகாசம் கிடைக்காமல் படத்தை அவசர அவசரமாக ரிலீஸ் செய்தனர். மோசமான வெற்றியை பெற்றாய் படம் நெல்சனின் சினிமா காரியரையும் அசைத்துப் பார்த்தது.
விருது விழாவில் அவரை அவமரியாதையாக நடத்தியது வைரலானது. அந்த நேரத்தில் தான் அவருக்கு ரஜினியை வைத்து ஜெயிலரை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அவர் தூக்கப்படுவார் என நினைத்த நிலையில் ரஜினிகாந்த் நெல்சனை படத்தை இயக்கட்டும் என முடிவெடுத்தாராம். அதைத் தொடர்ந்து வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
படத்தில் ரஜினிகாந்த் பல வருடங்களுக்குப் பிறகு ரசிக்கப்பட்டார். இதனால் நெல்சனின் கேரியர் மீண்டும் உச்சம் தொட்டது. தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தைப் போல இப்படத்திலும் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லாலின் கதாபாத்திரம் அதிக அளவில் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
தற்போது நெல்சன் திலீப்குமாருக்கு ஜெயிலர் 2 திரைப்படத்திற்காக 60 கோடி சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் சினிமா வட்டாரத்தில் இது குறித்த கிசுகிசுப்புகள் கிளம்பி இருக்கிறது. இத்தகவல் உண்மையாகும் பட்சத்தில் நெல்சனின் மிகப்பெரிய சம்பளம் இது என கூறப்படுகிறது.