கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தமிழ் சினிமாவில் டார்க் ஹியூமர் என்கிற கான்செப்ட்டில் முதலில் படம் இயக்கியார் நெல்சன்தான். இவரின் ஸ்டைல் ரசிகர்களுக்கும் பிடித்துப்போனது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜயை வைத்து பீஸ்ட், ரஜினியை வைத்து ஜெயிலர் ஆகிய படங்களை இயக்கினார். இதில் ஜெயிலர் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 600 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
தற்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் போலவே ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் கட்சிகள் ஜெயிலர் 2-விலும் இடம் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் துவங்கவிருக்கிறது. அங்கு படத்தின் முக்கிய காட்சிகளை அங்கு எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஒருபக்கம் ரஜினி – கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன்தான் இயக்கப்போகிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது. எனவே, நெல்சனின் அடுத்த படம் இதுதான் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. ஜெயிலர் 2 படத்தின் ஷுட்டிங் 2026 பிப்ரவரியில் முடிகிறது. ஜூலை மாதம் படம் ரிலீஸ். எனவே, அதுவரை நெல்சனுக்கு ஜெயிலர் 2 பணிகள் இருக்கிறது.
அதன்பின் ரஜினி – கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தின் கதையை எழுதி சில மாதங்களுக்கு பின்னரே ஷூட்டிங் துவங்கும் என சிலர் நினைத்தார்கள். ஆனால், அதிலும் ஒரு டிவிஸ்ட். ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு தெலுங்கு பட ஹீரோ ராம்சரணை வைத்து ஒரு படத்தை நெல்சன் இயக்கவிருக்கிறாராம். ஜூனியர் என்.டி.ஆரை வைத்து நெல்சன் இயக்குவதாக இருந்து, அது சில காரணங்களால் நடக்காமல் போக ராம் சரண் நடிக்கவிருக்கிறாராம். முழுக்கதையும் பைண்டட் ஸ்கிரிப்டாக நெல்சன் கொடுத்துவிட்டாராம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஒருபக்கம் ஜெயிலர் 2 ஷூட்டிங் முடிந்தவுடன் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பின்ன்ரே அவர் நெல்சன் இயக்கத்தில் மீண்டும் நடிப்பார் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
சமீபகாலமாகவே தமிழில்…
ரஜினியின் 173-வது…
சமீபத்தில் சிவகார்த்திகேயன்…
துள்ளுவதோ இளமை…