Categories: latest news

கவின் வேணான்னு சொன்ன நெல்சன்…. ஆனா அடம்பிடித்து ஹீரோவாக்கிய இயக்குனர்

ப்ளடி பெக்கர் என்ற படத்தை நெல்சன் தயாரிக்க சிவபாலன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வருகிறது. படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்கியது. என்ன சொல்றாருன்னு பாருங்க.

சிவபாலன் எனக்கு 15 வருஷமா தெரியும். ஜெயிலர் வரைக்கும் என்கூட ஒர்க் பண்ணியிருக்கான். டாக்டர், கோலமாவு கோகிலா வரைக்கும் எனக்கு ஐடியா சொல்லி இருக்கான். ஒரு நாள் எங்கிட்ட ஒரு கதை சொன்னான். ‘சரி. நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணு’ன்னு சொன்னேன். அப்புறம் கொஞ்சம் மாத்திட்டு வந்தான். ‘நீங்க புரொடியூஸ் பண்ணுங்க’ன்னான்.

அப்புறம் நான் ‘ஜெயிலர் ஹிட்டாச்சுன்னா பண்றேன்’னு சொன்னேன். ஜெயிலர் ஹிட்டாகுற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுன்னு சொன்னேன். என்னை விட ஜெயிலர் நல்லா போகணும்னு வேண்டுனது அவனா தான் இருப்பான்னு நினைக்கிறேன். அப்புறம் அவனைக் கூப்பிட்டு ‘யார் ஹீரோ’ன்னு கேட்டேன். ‘கவின்’னு சொன்னான்.

‘நான் உன்னைப் பெரிய ஆளா ஆக்கணும்னு நினைக்கிறேன். நீ உன் ப்ரண்டைப் பெரிய ஆளா ஆக்கணும்னு நினைச்சி உள்ளே கொண்டு வந்து உன்னையும் கவுத்து என்னையும் கவுத்திடாத’ன்னு சொன்னேன். ‘கவின் இந்தப் படத்துக்கு வேணாம்னு சொன்னேன். இன்னைக்கு உள்ள மார்க்கட்டுக்கு கவின் செட்டாகாது.

ஏதாவது பண்றதா இருந்தா ப்ரண்ட்ஷிப்பைத் தனியா வச்சிக்கலாம். நானும் அவனுக்கு ஏதாவது பண்றதா இருந்தா பண்ணிடுறேன். வண்டியில டிரிபிள்ஸ் போகாத’ன்னு சொன்னேன். ரெண்டு நாள் கழிச்சி வந்து கவினைத் தான் சொன்னான். ஆனா எனக்கு அவன் செட்டாக மாட்டான்னே தெரியல. அப்புறம் ‘பைனலா முடிவு பண்ண வேண்டியது நீதான்’னு சொன்னேன்.

அப்புறம் அவனும் கவின் தான்னு ‘ஓகே’ பண்ணிட்டு லுக் டெஸ்ட் காட்டினான். அதைப் பார்த்ததும் எனக்கும் அவன் செய்த எல்லாம் ஒர்க்கும் நல்லா பண்றான்னு தெரிஞ்சது. கடைசியா மொத்த படத்தையும் போட்டுப் பார்த்ததும் தான் கவின் சூப்பரா நடிச்சது தெரிஞ்சது. எனக்கு அப்போ தான் நாம பண்ணினது தப்புன்னு தெரிஞ்சது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

10 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

11 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

18 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago