Categories: latest news

போனி ஆகாத பிளடி பெக்கர்!. கலாநிதி மாறனுக்கே கொக்கி போட்ட நெல்சன்!….

Director Nelson: விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களில் இயக்குனர் நெல்சனும் ஒருவர். சிம்புவை வைத்து ஒரு படம் துவங்கி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அந்த படம் டிராப் ஆகி மீண்டும் விஜய் டிவிக்கே போனார். அதன்பின் சில வருடங்கள் கழித்து நயன்தாரா, யோகிபாபுவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார்.

இந்த படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. பிளாக் ஹியூமரில் கலக்கி இருந்தார் நெல்சன். தமிழ் சினிமாவில் இதுவரை எந்த இயக்குனரும் தொடாத ஏரியா அது. அதன்பின் சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் படம் பிளாக் ஹியூமர் வகை படம்தான்.

அந்த படம் 100 கோடி வசூலை பெற்றது. அதன்பின் விஜயை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் விஜய் ரசிகர்களையே கவரவில்லை. இந்த படத்தில் வில்லனை மிகவும் பலவீனமாக காட்டியதே அதற்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.

bloody begger

அதன்பின் ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி சூப்பர் ஹிட் கொடுத்தார் நெல்சன். இந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு பல கோடி லாபத்தை பெற்று கொடுத்தது. அதனால், ரஜினி மற்றும் நெல்சனுக்கு விலைமதிப்புள்ள காரை பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன்.

நெல்சன் இப்போது பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கவினை வைத்து பிளடி பெக்கர் என்கிற படத்தையும் தயாரித்துள்ளார். இந்த படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிவி மற்றும் ஓடிடி உரிமையை வாங்கி கொள்ளுமாறு விஜய் டிவியை நெல்சன் அணுகியிருக்கிறார்கள். அவர்களோ ஒரு கோடி ரூபாய் என சொல்ல அப்செட் ஆகிவிட்டாராம் நெல்சன்.

அதன்பின் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறனை நேரில் பார்த்து பிளடி பெக்கர் படத்தின் டிவி மற்றும் உரிமையை நீங்கள் வாங்கிக் கொள்ள வேண்டும் என நெல்ச்ன் கோரிக்க வைக்க 3 கோடிக்கு வாங்கி கொள்வதாக சம்மதம் சொல்லிவிட்டார் கலாநிதிமாறன். கலாநிதிமாறன் நேரிடையாக வியாபரத்தில் ஈடுபட்டது இதுதான் முதல் முறை என்கிறது திரையுலகம்.

ராம் சுதன்

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

8 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

8 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

16 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

17 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

18 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago