அது வேற வாய்!.. இது நாற வாய்!.. சோசியல் மீடியாவில் தளபதிய வச்சு செய்யும் நெட்டிஷன்கள்...!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:49  )

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். தற்போது சினிமாவை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி, பாடல் என அனைத்தையும் அறிமுகம் செய்தார்.

நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது பலரின் ஆதரவு அவருக்கு இருந்தது. அதெல்லாம் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் முதல் மாநாட்டிற்கு முன்புவரையில் தான். நடிகர் விஜய் தனது கட்சியின் முதல் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் நடத்தி முடித்தார். அதில் அவர் பேசிய அனல் பறக்க வைக்கும் பேச்சு பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

மாநாட்டில் பல கட்சிகளை தாறுமாறாக பேசியிருந்தார். சிலரை நேரடியாகவும், சிலரை மறைமுகமாகவும் தாக்கி பேசியிருந்தார். நடிகர் விஜயின் பேச்சுக்கு பலரும் தங்கள எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். முன்பு ஆதரித்தவர்கள் கூட தற்போது விஜய்க்கு எதிராக பேசி வருகிறார்கள். அதிலும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் எல்லாம் தம்பி தம்பி என்று உருகி கொண்டிருந்தார்.

தற்போது மாநாட்டிற்கு பிறகு அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றார். இது ஒரு புறம் இருக்க மாநாட்டிற்கு பிறகு சமூக வலைதள பக்கங்களில் எங்கு பார்த்தாலும் நடிகர் விஜய்யின் ட்ரோல்கள் தான் அதிகம் இருக்கின்றது. அதிலும் இந்த மாநாட்டில் திமுக கட்சியினரை அதிக அளவில் விமர்சித்து பேசி இருந்தார். இதனால் திமுகவின் ஆதரவாளர்களும் நடிகர் விஜயின் ஹேட்டர்களும் சமூக வலைதள பக்கங்களில் விஜய் கருணாநிதிக்கு ஆதரவாக பேசிய பல விஷயங்களை ஒன்றிணைத்து கிண்டல் அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஒரு வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பெயரையும் வைத்து கொண்டு தமிழகத்தை சுரண்டி கொள்ளை அடித்துக் கொண்டிருக்கும் குடும்ப சுயநல கூட்டம் தான் நம்முடைய அடுத்த எதிரி என்று மாநாட்டில் பேசியிருப்பார்.

அதுவே சில வருடங்களுக்கு முன்பு கலைஞருக்காக நடத்தப்பட்ட ஒரு சிறப்பு விழாவில் நடிகர் விஜய் கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். அதை கலைஞரின் நூறாவது பிறந்த நாளில் அவருடன் சேர்ந்து நான் பார்க்க வேண்டும் என்று பேசி இருப்பார். இதை இரண்டையும் இணைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Next Story