நடிகர் ரஜினிகாந்த் 40 நாட்களுக்கு முன்பாகவே கூலி படக்குழுவிடம் அறிவித்துவிட்டு தான் அவரது உடல்நிலைக்கான சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனைக்கு சென்றார் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று இரவு செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறி இருந்தார்.
கடந்த செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவில் திடீரென ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. ரசிகர்கள் எல்லாம் இரவு முழுவதும் தூங்காமல் தலைவருக்கு என்ன ஆனதோ என பதறி போய் விட்டனர். அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை மறுநாள் வந்த பின்னர் தான் நிம்மதியடைந்தனர்.
ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் செளந்தர்யா ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக ஒரு ட்வீட் போட்டிருந்தால் கூட இப்படியொரு பிரச்சனையும் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவுக்கு காரணம் கூலி படத்தின் ஷூட்டிங்கில் லோகேஷ் கனகராஜ் கஷ்டப்படுத்தியது தான் என்கிற வதந்தி எல்லாம் கிளம்பியிருக்காதே என்கிற கேள்விகள் லோகேஷின் பேட்டிக்குப் பிறகு எழுந்துள்ளது.
வேட்டையன் படத்தின் புரமோஷனுக்காகத் தான் முன்கூட்டியே ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு அறிவிக்காமல் விட்டு விட்டாரா? என கமல்ஹாசன் மற்றும் விஜய் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த விவகாரத்தை பற்றி பேசி வருகின்றனர்.
படத்தின் புரமோஷனை எல்லாம் தாண்டி ரஜினிகாந்த் ரசிகர்களை மனதில் வைத்து இதற்காகத்தான் சென்று வருகிறேன் என சூப்பர் ஸ்டார் அறிவித்திருந்தால் இப்படி தேவையற்ற வதந்திகள் பரவி இருக்காது என்பதே அனைவரது கருத்தாக உள்ளது.
ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாகிறது. அதன் பின்னர், அக்டோபர் 15ம் தேதி மீண்டும் கூலி படத்தின் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் நடிக்கப் போவதாக லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக்கழகம்…
தமிழ் சினிமாவில்…
GoatMovie: விஜய்…
சத்யராஜ் ஆரம்பகாலகட்டத்தில்…
நடிகர் அஜித்தின்…