Categories: Cinema News latest news

இந்தியன் 2-வுக்கு பாசிட்டிவ் ரிவ்யூ!.. தக் லைஃப் பரிதாபம்!.. தெறிக்கும் மீம்ஸ்!…

Thug life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு முக்கிய வேடங்களில் நடித்து உருவான தக் லைஃப் படம் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில் வெளியானது. இந்த படத்தில் திரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். அவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டது.

நாயகனுக்கு பின் கமலும், மணிரத்னமும் இணைந்திருப்பதால் இப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. எனவே, படத்தின் முதல் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். பலரும் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்திருந்தார்கள். ஆனால், படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றே பார்க்கப்படுகிறது.

படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் ‘படம் நன்றாக இல்லை. படத்தில் கதை ஒன்றுமில்லை, கமல், சிம்பு நன்றாக நடித்திருந்தாலும் எந்த காட்சியும் மனதில் ஒட்டவில்லை. மணிரத்னம் படமா என்கிற சந்தேகமே வருகிறது. சிம்புவை மணிரத்னம் வேஸ்ட் செய்துவிட்டார்’ என சொல்லி வருகிறார்கள்.

சிலரோ ‘படம் ஓடாது. கர்நாடகாவில் உள்ள வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இன்னும் சில சண்டைக் காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என சிலர் சொல்கிறார்கள். ஒருபக்கம், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூகவலைத்தளங்களில் படத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மீம்ஸ் மூலம் படத்தை பலரும் கலாய்த்து வருகிறார்கள். ’கமல் மன்னிப்பு கேட்குறாரோ இல்லையோ. மணிரத்னம் எங்ககிட்ட மன்னிப்பு கேட்கணும்’ என ஒருவர் மீம்ஸ் போட்டுள்ளார். அதோடு, தக் லைப் படத்திற்கு இந்தியன் 2-வே பரவாயில்லை என பலரும் பதிவிட அதையே மீம்ஸாக சிலர் உருவாக்கி விட்டார்கள். இந்த எல்லா மீம்ஸ்களுமே இணையத்தில் வைரலாகி வருகிறது. வருகிற விமர்சனங்களை பார்க்கும்போது தக் லைப் படம் கமலுக்கு ஒரு தோல்விப்படமாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
சிவா