நாக சைத்தன்யா செம லக்கிப்பா!.. புது பொண்டாட்டியின் அஜால் குஜால் போட்டோக்களை வெளியிட்ட நெட்டிசன்ஸ்...

by ராம் சுதன் |

Sobhita Dhulipala: தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைத்தன்யா. தெலுங்கில் தொடார்ந்து நடித்து வரும் நடிகர் இவர். நடிகை சமந்தாவுடன் திரைப்படங்களில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் போல ஜோடியாக வலம் வந்தனர்.

ஆனால், அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை போனது. நாக சைத்தன்யா - சமந்தா விவகாரத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி சினிமாவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி விவாதிக்கப்பட்டது. நாகசைத்தன்யாவின் ரசிகர்களும், ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்களும் சமூகவலைத்தளங்களில் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

அதில் ஒரு சிலருக்கு சரியான பதிலடி கொடுத்தார் சமந்தா. இப்போது சினிமாவில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். ஒருபக்கம், சமந்தாவுக்கும், விஜய தேவரகொண்டவுக்கும் இடையே காதல் என வதந்தியெல்லாம் கிளம்பியது. ஒருபக்கம், நாக சைத்தன்யா மறுமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பாதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில்தான், ஹிந்தி, தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை சோபிதா துளிபாலாவுக்கும் நாக சைத்தன்யாவுக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை நாக சைத்தன்யாவின் அப்பாவான நாகர்ஜூனா டிவிட்டரில் பகிர்ந்து மணமக்களுக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார்.

சோபிதா துளிபாலா மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்திலும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நாக சைத்தன்யாவுக்கும் அவருக்கும் திருமணம் என்பது ரகசியமாகவே இருந்து வந்த நிலையில் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

இந்நிலையில், சோபிதாவின் கவர்ச்சி புகைப்படங்களை தோண்டியெடுத்து நாக சைத்தன்யா கொடுத்து வைத்தவர் என பதிவிட்டு வருகிறார்கள் சில காஜி ரசிகர்கள்.

Next Story