மகன் வயது காதலிக்கு முத்தமிட்டாரா நடிகர் விக்ரம்?.. இது என்ன புது கூத்தா இருக்கு!..

நடிகர் விக்ரம்:
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விக்ரம். ஒவ்வொரு திரைப்படத்திலும் முழு அர்ப்பணிப்புடன் மெனக்கட்டு நடிக்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த நடிகர். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று அதற்காக தனது உடலை வருத்தி நடிக்க கூடிய நடிகர் விக்ரம்.
தங்களான் திரைப்படம்:
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தங்களான். பா ரஞ்சித் இயக்கத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு கொண்டாடும் விதமாக இருந்தது. ஆனால் படத்தின் கதை காரணமாக ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்ததால் படம் சுமாரான வெற்றியை கொடுத்திருந்தது.
வீர தீர சூரன்:
நடிகர் விக்ரம் தற்போது அருண்குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி இருக்கிறார்கள். இதில் இரண்டாவது பாகம் முதலில் வெளியாகும் என்றும் முதல்பாகம் அதற்குப் பிறகு வெளியாகும் என்று கூறி இருக்கிறார்கள்.
இந்த திரைப்படம் சியான் விக்ரமின் 62 ஆவது படமாக இப்படம் உருவாகி இருக்கின்றது. ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா உடன் இணைந்து சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தை எச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை பெற்றிருந்த நிலையில் நேற்று இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இதில் சியான் விக்ரம் காளி என்கின்ற கேங்ஸ்டர் வேடத்தில் நடித்திருக்கின்றார். மேலும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருக்கின்றார்.
மளிகை கடை வைத்து நடத்தி வரும் விக்ரம் தனது பெண் குழந்தையை மிகுந்த பாசத்துடன் கவனித்து வருகின்றார். இப்படத்தில் நடிகர் சியான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்து இருக்கின்றார். நேற்று வெளியான டீசரில் நடிகை துஷாரா விஜயனுக்கு சியான் விக்ரம் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதள பக்கங்களில் கிண்டல் செய்து பதிவை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் அவர்கள் தெரிவித்திருந்ததாவது வீர தீர சூரன் டீசரில் தனது காதலி துஷாரா விஜயனுக்கு நடிகர் விக்ரம் முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் வைரலானது. ஆனால் நடிகை துஷாரா விஜயனுக்கு விக்ரமின் மகன் துருவ் வயதுதானாம். இருவருக்குமே 27 வயதாகின்றது. இதனால் மகன் வயது காதலிக்கு முத்தம் கொடுத்து இருக்கின்றார் நடிகர் விக்ரம் என்று சமூக வலைதள பக்கங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள்.