பரபரப்பான பிக்பாஸ் வீடு… உள்ளே வரும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்… ஹிட்டடிக்கும் பாய்ஸ் டீம்..
BiggbossTamil: பிக் பாஸ் சீசன் எட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சில போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைத்திருக்கிறது. இதை அதிகரிக்க தயாரிப்பு நிறுவனம் பல வழிகளில் முயன்று வருகிறது.
ஏழாவது பிக்பாஸ் சீசனை போல இல்லாமல் இந்த சீசனில் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் டாஸ்க் கடந்த வாரம் பெண்கள் அணியை ஆண்கள் அணி ஆபத்தான முறையில் நடந்து கொண்டதாக விஜய் சேதுபதி தன்னுடைய வார இறுதி எபிசோடுகளில் தாக்கி பேசி இருப்பார்.
அது மட்டுமல்லாமல் இந்த சீசன் பிக்பாஸில் ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டிருக்கின்றனர். நாமினேஷனில் கூட ஆண்களை பெண்களும், பெண்களை ஆண்களும் நாமினேட் செய்வதை பார்க்க முடிகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் ஆக பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் வெளியேறினார். அடுத்த எலிமினேஷன் ஆக சீரியல் நடிகர் அர்னவ் வெளியேற இந்த வாரத்தில் தர்ஷா குப்தா வெளியேறி இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நாளை வைலட் கார்டு எண்ட்ரி 5 போட்டியாளர்களை உள்ளே இறக்க தயாரிப்பு குழு திட்டமிட்டு இருக்கிறதாம். இவர்கள் உள்ளே செல்லும் எபிசோட் தீபாவளி தினத்தில் வெளியிட முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.