அவார்டுலாம் எனக்கு சும்மா ஜுஜிபி!.. தேசிய விருது வாங்கிய நித்யா மேனன் சொல்றதைப் பாருங்க...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:39:18  )

சிலர் படங்களில் கஷ்டப்பட்டு நடிச்சாத் தான் அவார்டு கிடைக்கும்னு நினைச்சி உடலை வருத்தி நடிப்பாங்க. சிலர் அவார்டு பத்தி எல்லாம் கவலையேப் படாம கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகைப்படுத்தாம நடிப்பாங்க. இதுல 2வது ரகம் தான் நடிகை நித்யா மேனன். அந்த வகையில் இவரைப் பற்றியும் இவர் என்ன சொல்கிறார் என்பது குறித்தும் பார்க்கலாமா...

பெங்களூரைச் சேர்ந்த பிரபல நடிகை நித்யா மேனன். சிறந்த பின்னணிப்பாடகியும் கூட. இவர் ஆரம்பத்தில் பத்திரிகைத் துறையில் பணிபுரிய ஆர்வமாக இருந்தாராம். அதன்பிறகு அந்த ஆர்வம் குறைந்ததால் திரைப்படத்துறையில் ஒளிப்பதிவாளருக்கான படிப்பைப் படித்து முடித்துள்ளார்.

தமிழில் இவர் நடித்த 180, வெப்பம், உருமி படங்களும், மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி மற்றும் விஜயுடன் நடித்த மெர்;சல் படமும் இவரைக் கவனிக்க வைத்தன. அன்பிறகு காஞ்சனா 2, 24, இருமுகன், சைக்கோ, திருச்சிற்றம்பலம் என இவர் நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் தான். ஆனாலும் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்த படம்என்றால் அது திருச்சிற்றம்பலம் தான். படத்தில் இவரது நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டது.

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை தற்போது நித்யா மேனன் பெற்றுள்ளார். இதுகுறித்து இவர் அளித்த கருத்து ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. என்னன்னு பார்க்கலாமா...

திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். இதற்கு முன்பு நடித்த படங்களுக்கு எனக்கு அவார்டு கிடைக்கவில்லையே என நான் வருத்தப்பட்டது கிடையாது. ஏனென்றால் நான் அவார்டை மனதில் வைத்துக் கொண்டு நடிப்பதில்லை.

அதனால் இது எனக்கு நல்ல சர்ப்ரைஸாக இருந்தது. நான் இப்போது பல படங்களில் நடித்து வருகிறேன். மீண்டும் தனுஷ் உடன் இணைந்து நடிக்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story