வாய்ப்பு இல்லாம 5 வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்த கார்த்தி பட நடிகர்... 'ஓ...' அந்த பிரபலமா..?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:18  )

நந்தா முடிஞ்ச பிறகு படங்கள் வரவே இல்லை. எந்தப் படமும் நடிக்கல. மறுபடியும் மாமா, அண்ணன்னு நடிக்கக் கூப்பிட்டாங்க. யாருக்கும் போகல என்கிறார் பிரபல நடிகர் சரவணன். பருத்தி வீரனுக்கு அமீர் கூப்பிடும்போதே 'நான் ஒரு மேட்டர் பண்ணிருக்கேன். அதை மட்டும் நீ பண்ணிட்டேன்னா உலகமே திரும்பிப் பார்க்கும்னு முதல்லயே சொன்னாரு'ங்கறார் சரவணன்.

5 வருஷம் படம் இல்ல. கிரில் கேட்டை வெளியே பூட்டிட்டு வீட்டுக்கு உள்ளேயே இருப்பேன். 5 வருஷம் அப்படி இருந்தேன். யாருக்கும் தெரியாது. நான் வெளியே போனா எல்லாரும் கேட்பாங்க. என்ன படம் பண்றீங்க? நான் என்ன பதில் சொல்றது? அப்புறம் ஒண்ணும் இல்லையா? அவ்வளவு தானா? போச்சான்னு சொல்லுவாங்க.

வெளியே வர முடியாது. நான் உச்சத்துல இருக்கும்போது என்ன பார்ப்பாங்க. வந்து போட்டோ எடுப்பாங்க. ஆனா இப்போ படம் இல்லையே. 15 படம் பண்ணிட்டு படம் வேணும் படம் வேணும்னு வாய்ப்பா கேக்க முடியும்? சரக்கு போட்டுட்டுத் தான் சாப்பிடுவேன். அப்படிலாம் இருந்தேன்... என்று ரொம்பவே மனமுடைந்து பேசியுள்ளார் நடிகர் சரவணன்.

பருத்திவீரன் படத்தில் கார்த்தியுடன் இணைந்து சரவணன் சித்தப்பு செவ்வாழைங்கற கேரக்டர்ல நடித்துக் கலக்கி இருப்பார். 2007ல் அமீர் இயக்கத்தில் கார்த்தி, சரவணன், பிரியாமணி, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்பட பலர் நடித்த படம் பருத்தி வீரன்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே சக்கை போடு போட்டன. அறியாத வயசு, அய்யய்யோ, நாதஸ்வரம், சரி கம பதனி, டங்கா டுங்கா, ஊரோரம் புளியமரம் ஆகிய பாடல்கள் உள்ளன. கமர்ஷியல் படமாக வந்து ரசிகர்களைத் துள்ளிக் குதிக்க வைத்தது பருத்திவீரன். இந்தியிலும் டப்பிங் செய்யப்பட்டது. சிறந்த நடிகை பிரியாமணி, சிறந்த எடிட்டர் ராஜா முகம்மது என ௨ தேசிய விருதுகளை வென்றது. அதே போல 3 மாநில அரசின் விருதுகளையும் பெற்றது.

Next Story