ஒரு மண்ணும் இல்ல! அத்தனையும் வதந்தி.. பிரசாந்த் நீல் - அஜித் இடையே நடந்தது என்ன?

by ராம் சுதன் |

காலையில் இருந்து சோசியல் மீடியாவே ஒரே பரப்பரப்பில் இருக்கின்றது. அஜித்தும் பிரசாந்த் நீலும் இணைந்து ஒரு படத்தில் இணைய இருக்கிறார்கள் என்ற அந்த செய்தி ரசிகர்கள் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் அஜித்தி அடுத்த இரு படங்களை பிரசாந்த் நீல்தான் இயக்க இருக்கிறார் என்ற ஒரு செய்திதான் அனைவரையும் திகிலடைய வைத்தது.

அதெப்படி சத்தமில்லாமல் இந்த ஒரு சம்பவம் அரங்கேறியது என கோடம்பாக்கத்தில் அனைவரும் பேசி வருகிறார்கள். ஏற்கனவே ஒரு முறை இந்த மாதிரி ஒரு வதந்தி பரவி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதே போல் மீண்டும் அதே ஒரு செய்தி பரவுகிறது என்றால் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்றும் யோசிக்க வைத்தது.

அதாவது கேஜிஎஃப் 3 படத்தில் யஷுடன் இணைந்து அஜித் ஒரு பெரிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் அஜித்தின் அடுத்த படத்தை பிரசாந்த் நீல்தான் இயக்க இருக்கிறார் என்றும் அடுத்தடுத்து அப்டேட்கள் வந்து ரசிகர்களை பெரும் ஹைப்பில் வைத்திருந்தது இந்த செய்தி.

ஆனால் இதெல்லாம் ஒரு முற்றிலும் வதந்தி என வலைப்பேச்சில் பிஸ்மி தெரிவித்திருக்கிறார். அப்படி இருக்கும் போது எப்படி இந்த மாதிரி செய்தி திடீரென பரவியது என விசாரித்ததில் பிஸ்மி சில தகவல்களை கூறினார்.

அதாவது அஜர்பைஜானில் இருக்கும் அஜித் ஐதராபாத்திற்கு வருவார் என்றும் வந்த பிறகு அஜித்தை சந்தித்து பேசுங்கள் என்றும் பிரசாந்த் நீலிடம் ஒருவர் சொன்னதாகவும் அவர்தான் இந்த செய்தியை காற்றில் பறக்க விட்டிருக்கிறார் என்றும் அது அப்படியே பெரிய பூதாகரமாக மாறியிருக்கிறது என்றும் பிஸ்மி கூறினார்.

அந்த நபர் பிரசாந்த் நீலுக்கு வேண்டியவரா இல்லையா என்பதே தெரியாதாம். ஆனால் இன்னொரு பக்கம் ஒரு பெரிய நடிகரை வைத்து படம் எடுக்க விரும்பும் இயக்குனர் அவர் வரும்வரை காத்திருப்போம் என்றெல்லாமா இருப்பார்? அவர் இருக்கும் இடத்தை தேடியே போகமாட்டாரா? அதனால் இதெல்லாம் சுத்த பொய். வதந்தி என வலைப்பேச்சில் கூறியிருக்கிறார்கள்.

Next Story