Kamalhaasan: பொதுவாக பெரிய நடிகர்களின் பிறந்த நாள் என்றாலே அவர்களின் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில், அந்த நடிகர் நடித்து வரும் அல்லது நடிக்கப்போகும் புதிய படங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகும். அல்லது நடித்து கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், டீசர், டிரெய்லர், பாடல் வீடியோ என எதாவது ஒன்றை வெளியிடுவார்கள்.
முன்பெல்லாம் செய்தி தாள்களில் பல பக்கங்களில் விளம்பரங்கள் வரும். ஆனால், சமூக வலைத்தளங்களை எல்லோரும் பயன்படுத்த துவங்கிவிட்டதால் இப்போதெல்லாம் பேப்பர்களில் யாரும் சினிமா அப்டேட் கொடுப்பதில்லை. 5 வயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
சினிமாவில் பல புதிய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர். வித்தியாசமான கதைகள் மற்றும் தோற்றங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர். இவருக்கென பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் 4 வருடங்களாக அவர் சினிமாவில் நடிக்கவில்லை. அதன்பின் லோகேஷ் கனகராஜோடு கூட்டணி அமைத்து விக்ரம் படத்தை கொடுத்தார். அது சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. கமல் படங்களிலேயே அதிக வசூலை அள்ளிய படமாக விக்ரம் இருக்கிறது.
அதன்பின் கல்கி, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப், அன்பறிவு இயக்கத்தில் ஒரு படம் என பிஸியானார் கமல். வருகிற நவம்பர் 7ம் தேதி கமலின் பிறந்தநாள் வருகிறது. எனவே, தக் லைப் படத்தின் டீசரோ, டிரெய்லரோ வெளியாகுமா என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.
ஆனால், அப்படி எதுவும் வெளியாகாது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஏனெனில், தக் லை படம் 2025ம் வருடம் ஏப்ரல் மாதம்தான் வெளியாகவிருக்கிறது. எனவே, ரிலீஸுக்கு 5 மாதங்களுக்கும் மேல் இருப்பதால் வீடியோ எதுவும் வெளியாக வாய்ப்பில்லை என்கிறார்கள். அதேநேரம், தக் லைப் தொடர்பான புதிய போஸ்டர் ஒன்றை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…