Connect with us

ஸ்ரீகாந்த் மட்டுமில்லை!.. ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகளுக்கு போ..தை பொருட்கள் சப்ளை!.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

latest news

ஸ்ரீகாந்த் மட்டுமில்லை!.. ஏகப்பட்ட நடிகர்கள், நடிகைகளுக்கு போ..தை பொருட்கள் சப்ளை!.. தயாரிப்பாளர் அதிர்ச்சி!

ஈசிஆர் படத்தில் நடித்த ஸ்ரீகாந்த் ஈசிஆர் சாலையில் உள்ள ரெஸ்ட்ரோ பாரில் அடிக்கடி போ..தை பொருட்களை வாங்கி பயன்படுத்துவார் என அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரசாத் என்பவர் போ..தைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதனை தொடர்ந்து ஸ்ரீகாந்திடம் நுங்கம்பாக்கம் போலீஸார் இன்று இரத்த மாதிரி சோதனை நடத்த, அதில், ஸ்ரீகாந்த் போதைப்பொருளை உட்கொண்டது உறுதியானதை அடுத்து அவரை கைது செய்துள்ளனர்.

நடிகர் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி இந்த விவகாரத்தில் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பி கிருஷ்ணாவின் பெயரும் அடிபட்டுள்ளதாக தயாரிப்பாளர் பாலாஜி பிரபு யூடியூப் சேனலில் பகீர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். மேலும், பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தடைசெய்யப்பட்ட இந்த போ..தைப் பொருளை பிரசாத்திடம் இருந்து வாங்கி வீக்கெண்ட் பார்ட்டிகள் ஆனால், பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் முக்கியமான சில நடிகர்கள் இந்த விவகாரத்தில் பெரிதாக சிக்கப் போகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே நடிகர் ஷாம் தனது வீட்டில் சீட்டாட்டம் உள்ளிட்டவை விளையாடியதாக சிக்கினார். அந்த வழக்கு சில ஆண்டுகள் சென்றது என்றும் பாலாஜி பிரபு கூறியுள்ளார். சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள் தான் போ..தைப் பழக்கத்துக்கு அதிகம் அடிமையாகி வருகின்றனர்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டாலும், அவர்களை இந்த அடிமைத்தனத்தில் இருந்து யாராலும் மீட்க முடியாது என்றும் சில இளம் நடிகைகளும் இந்த போ..தைப் பொருள் விவகாரத்தில் வசமாக சிக்கியிருப்பதாகவும் ஒவ்வொருவராக வெளியே அம்பலப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top