பின்ன சும்மாவா.. அரண்மனை 4 சும்மா கொட்டி கொடுத்துருக்கே... பார்ட் 5-க்கு ரெடியான சுந்தர் சி..!
தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் பேர் போனவர் இயக்குனர் சுந்தர் சி. தொடர்ந்து படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் கதாநாயகனாக பல படங்களில் நடித்தும் வந்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் 6 மாதத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவிற்கு அந்த அளவுக்கு வரவேற்பை கொடுக்காத நிலையில் கோலிவுட்டை காப்பாற்றிய திரைப்படம் என்றால் அது அரண்மனை 4 திரைப்படம் தான்.
கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கலெக்ஷனில் பட்டையை கிளப்பியது. இந்த திரைப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். காமெடி மற்றும் த்ரில்லர் கதையாக உருவான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாள் முதலே நல்ல வரவேற்பை கொடுத்தது.
காதல் திருமணம் செய்து கொண்ட தமன்னா கணவர் மற்றும் குழந்தைகளுடன் மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்போது கணவர் மர்மமான முறையில் இறந்துவிட தமன்னாவும் தற்கொலை செய்து கொள்கின்றார். இந்த தகவல் தமன்னாவின் அண்ணனான சுந்தர் சிக்கு தெரிய வர தங்கை மரணத்தில் ஏதோ சந்தேகம் இருப்பதாக எண்ணுகின்றார். அதையடுத்து தீய சக்திகளிடம் இருந்து தங்கையின் குழந்தைகளை காப்பாற்றுகின்றார் சுந்தர் சி .
இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அரண்மனை ௪ மேல் இருக்கும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு அரண்மனை ௫ படத்திற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்து இருக்கின்றார் இயக்குனர் சுந்தர் சி. மேலும் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சுந்தர் சி இயக்கும் இந்த படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கின்றார்.
இந்த திரைப்படம் வருகிற நவம்பர் கடைசியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முறை மே மாதம் வெளியானது போன்று அடுத்த வருடம் கோடை விடுமுறையில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.