Kollywood: தமிழ் சினிமாவில் ஒரு கதையை வைத்து சரியாக திரைக்கதையை அமைப்பதில் தயங்கும் இயக்குனர்கள் மத்தியில் ஒரே நேரத்தில் மூன்று, நான்கு கதையை சொல்லும் இயக்குனர்களின் சுவாரஸ்ய அப்டேட்.
இந்த வகை படங்கள் ஹைப்பர்லிங்க் எனக் கூறப்படுகிறது. இந்த மாதிரி படங்களில் மூன்று அல்லது நான்கு கதைகள் தனித்தனியா போற மாதிரி அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு கட்டத்துல அந்த கதைகளுக்குள் ஒரு கனெக்ஷன் பாயிண்ட் வரும்.
இந்த மாதிரி படங்களில் டைமிங், எடிட்டிங் எல்லாம் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும். இப்படி சரியாக அமைத்து வெற்றிக்கண்ட தமிழில் சினிமாவின் சூப்பர்ஹிட் படங்களில் பக்கா லிஸ்ட். இதில் முதல் படமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்தது ஆயுத எழுத்து.
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்த நடித்த படம். இதில் ஆயுத எழுத்தை போல மூன்று பேருக்கும் தனிதனியாக கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் பாலத்தில் நடக்கும் ஒரு துப்பாக்கி சூடு மூவர் வாழ்க்கையையும் இணைக்கும்.
எங்குமே பிசிறாமல் அக்மார்க் ஹைப்பர்லிங்க் திரைப்படமாக அமைக்கப்பட்டு சூப்பர்ஹிட்டாக அமைந்துள்ளது. இதை போல இன்னும் சூப்பர்ஹிட் ஹைப்பர்லிங்க் படமாக அமைந்தது விருமாண்டி. கமல், பசுபதி, நெப்போலியன் உள்ளிட்டோரின் கதையை தனிதனியாக சொல்லப்பட்டு வரும்.
ஒரு கட்டத்தில் இவர்களின் கதையும் சிறைச்சாலையில் ரோகிணியிடம் சொல்லப்படும் போது மூன்று விதமாக விரிந்து ஒரு பாயிண்ட்டில் இணையும். ஹைப்பர்லிங்கில் முக்கிய படமாக விருமாண்டி இதுவரையிலும் முக்கிய படமாக இருக்கிறது.
தியாகராஜன் குமரன் இயக்கத்தில் ஹைப்பர்லிங்க் படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்து இருக்கிறது. முதல் படமான ஆரண்யகாண்டம் கூட இதேவகை ஹைப்பர்லிங்க் கதைதான். ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், சோம சுந்தரம் நடித்திருந்த படம்.
நான்கு கதைகள் தனிதனியாக சென்று ஒரு கட்டத்தில் இணையும். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஹைப்பர்லிங்க் படங்களில் குறிப்பிடத்தக்கது. இப்படத்தினை தொடர்ந்து தியாகராஜன் இயக்கிய இரண்டாவது படமான சூப்பர் டீலக்ஸும் இதே கதைதான்.
விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படமும் ஹைப்பர்லிங்க் கதைதான். தனியாக ஒரே நாளில் நடக்கும் கதையை எங்குமே நழுவாமல் சரியாக இணைத்து அப்ளாஸ் வாங்கி இருக்கிறார் இயக்குனர் தியாகராஜன்.
இந்த படங்கள் மட்டுமல்லாமல் வானம், மாநகரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களும் ஹைப்பர் லிங்க் கதைகளாக வந்து கோலிவுட்டில் சூப்பர்ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…
நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…