Climax: சினிமாவில் ஒரு படத்தின் கிளைமேக்ஸ் தான் பெரிய அளவில் தாக்கத்தினை ஏற்படுத்தும். ஆனால் தற்போது அதற்கே வேட்டு வைக்கும் விதமாக ஒரு சம்பவத்தினை படக்குழு செய்திருக்கிறது.
பொதுவாக தமிழ் சினிமாவில் சில படங்களின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதை, எடிட்டிங்கால் சொதப்பி விடும். மற்ற எல்லாமே நன்றாக இருந்தால் கூட கிளைமேக்ஸ் தடுமாறி மொத்த படத்தினையுமே காலி செய்து விடும்.
கோலிவுட் சினிமாக்களில் கிளைமேக்ஸில் நெகட்டிவாக இருந்தாலே சில படங்கள் மொத்தமாக முடிந்து விடும். பிரபல ஹீரோக்களின் படங்களாக இருந்தால் கிளைமேக்ஸில் அவர்கள் இறப்பது போல காட்சி இருந்தாலே ரசிகர்கள் வெறுப்பாகி விடுவர்.
தளபதி விஜயின் நடிப்பில் புதிய கீதை திரைப்படம் கூட இதே கதையாக தான் அமைந்தது. இறுதியில் அவர் இறப்பது போல கதையுடன் படம் வெளியாக கடைசியில் ரசிகர்கள் அதை ஒப்புக்கொள்ளாமல் கோபமாகி விட்டனர். பின்னர் ஒரு கிளைமேக்ஸ் ஷூட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இதற்கெல்லாம் இனி கவலையே இல்லை. ஒரே படத்தில் இரண்டு கிளைமேக்ஸில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. பாலிவுட் பிரபல சீரிஸான ஹவுஸ்புல்லின் ஐந்தாவது பாகம் வெளியாக இருக்கிறது. அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத், ரிதேஷ் தேஷ்முக், ஜாக்கி ஷெராஃப், நானா படேகர், சோனம் பஜ்வா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கிளைமேக்ஸ் தான் தற்போது இரண்டாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹவுஸ்புல் ஏ மற்றும் ஹவுஸ்புல் பி என்ற பெயரில் திரையரங்கில் வெளியாக இருக்கும் படத்தினை ரசிகர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்து பார்த்துக் கொள்ளலாம்.
ஏ கிளைமேக்ஸில் நடக்கும் கொலை உள்ளிருக்கும் பிரபலங்களில் ஒருவர் செய்வதாக இருக்குமாம். பி கிளைமேக்ஸில் கேமியோ எண்ட்ரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பாலிவுட் படங்கள் எல்லாமே தோல்வியாகி வருகிறது.
இந்நிலையில் வசூலை அதிகரிக்கவும் பாலிவுட்டை காக்கவும் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கின்றனராம். இரண்டு கதை என்பதால் வசூலும் எக்கசக்கமாக உயரும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…