விஜய் படத்துக்கே இந்த நிலைமையா?.. ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணமா?..

by ramya suresh |
விஜய் படத்துக்கே இந்த நிலைமையா?.. ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதுக்கு இதுதான் காரணமா?..
X

தமிழ் சினிமா மார்க்கெட்டில் டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் விஜய். லைம் லைட்டில் இருந்து கொண்டிருந்தபோதே சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கின்றார். அரசியலில் கால்பதிக்க முடிவு செய்திருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கின்றார்.

கடந்த வருடம் பிப்ரவரி மாதம் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கட்சி, கொடி, மாநாடு என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்திருக்கின்றார். தற்போது வரை அரசியல் வேலைகளிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றார். இது ஒரு புறம் இருக்க தனது கடைசி படமான தளபதி 69 என்கின்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்த திரைப்படத்தைச் ஹச் வினோத் இயக்கி வருகின்றார். படத்திற்கு ஜனநாயகன் என பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் இருந்து வெளியான 2 போஸ்டர்களும் அரசியல் சம்பந்தப்பட்டதாக இருப்பதால் நிச்சயம் இது ஒரு பொலிட்டிக்கல் படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் இப்படத்தில் நடிகர் விஜயுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பிரியாமணி, மமீதா பைஜூ, பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், நரேன் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்தின் முதல் ஷெடியூல் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த ஷெடியூல் தொடங்கி இருப்பதாக கூறப்படுகின்றது.

கடந்த ஆண்டு படம் தொடர்பான அறிவிப்பு வெளியான சமயத்தில் படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறி வந்தார்கள். ஆனால் சினிமா வட்டாரங்களில் கூறுவதை பார்த்தால் படம் இந்த வருடம் வெளியாகாது. அடுத்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவித்து வருகிறார்கள்.

எதற்காக படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளிப்போட வேண்டும். ஒருவேளை 2026 ஆம் ஆண்டு தேர்தல் வருவதால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறார்கள் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது அதன் உண்மை காரணம் வெளியாகி இருக்கின்றது. அதாவது ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஓடிடி உரிமை இன்னும் விற்பனையாக வில்லையாம்.

இன்றைய தமிழ் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்கள் திரைப்படங்களின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தான் பெரிய தொகை கொடுத்து வாங்கி வருகின்றது. அப்படி இருக்கும் சமயத்தில் இந்த ஆண்டுக்கான அனைத்து ஓடிடி ரிலீஸ் உரிமையையும் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்த காரணத்தால் ஜனநாயகன் திரைப்படத்தை குறைந்த விலையில் கொடுக்க முடியாது என்பதால் அடுத்த ஆண்டுக்கு படத்தை தள்ளி வைத்துக் கொள்ளலாம் என படக்குழுவினரே முடிவு செய்திருக்கிறார்களாம்.

இதைவைத்து பார்க்கும்போது அடுத்த ஆண்டு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கும் முதல் திரைப்படம் ஜனநாயகன் திரைப்படமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. நடிகர் விஜய்யின் ஒவ்வொரு திரைப்படமும் அதிக விலைக்கு விற்பனையாகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதிலும் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் நிச்சயம் மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story