ரஜினி சார் எனக்காக அத பண்ணாரு!.. எனக்கு கொடுத்த மரியாதை.. பிரபல நடிகை உருக்கம்..!

நடிகர் ரஜினிகாந்த்: தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த். தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்கின்ற திரைப்படத்தில் மிக பிஸியாக நடித்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். இந்த திரைப்படத்தை முடித்த கையோடு நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இளம் நடிகர்கள் கூட இந்த அளவுக்கு பிஸியாக இருப்பார்களா என்பது தெரியவில்லை. அடுத்தடுத்து திரைப்படங்களை கமிட் செய்து 74 வயதான போதிலும் இளம் நடிகர்களுக்கு டப் கொடுத்து வருகின்றார் நடிகர் ரஜினிகாந்த். இவரை குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பிரபல சீரியல் நடிகையான அனிதா வெங்கட் கூறியிருக்கின்றார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர் நடிகர் ரஜினி கேரக்டர் குறித்தும் அவர் தன்னிடம் நடந்து கொண்டது குறித்தும் பெருமையாக பேசி இருக்கின்றார். தற்போது பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருகின்றார் அனிதா வெங்கட். சீரியல் நடிகைகளில் பிரபல நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானது ரஜினியின் படையப்பா திரைப்படத்தின் மூலமாக தான்.
படையப்பா திரைப்படத்தின் ஆடிஷனுக்கு அனிதா வெங்கட் வந்திருக்கின்றார். அப்போது அவர் மிகச் சிறிய பெண்ணாக இருந்ததால் அவருக்கு ரஜினியின் மகள் கதாபாத்திரத்திற்கு சரி வராது என்று கூறி ரிஜெக்ட் செய்து விட்டார்கள். இதனால் அவர் மிகவும் வருத்தப்பட்டாராம். அந்த திரைப்படத்தில் முதலில் ரஜினியின் மகள் கதாபாத்திரத்தில் ஒரே ஒரு மகள் தான் கதைப்படி இருந்திருக்கின்றார். அந்த பெண்ணும் கல்லூரி படிக்கும் பெண்ணாக இருக்க வேண்டும்.
ஆனால் அனிதா வெங்கட் கல்லூரி படிக்கும் பெண் போல தெரியவில்லை. பள்ளி படிக்கும் பெண்ணை போல் இருந்ததால் ஆடிஷனில் வேண்டாம் என்று மறுத்து விட்டார்கள். தன்னை ரிஜெக்ட் செய்து விட்டார்கள் என்று மிகுந்த சோகத்தில் வாடிய முகத்துடன் இருந்திருக்கின்றார் அனிதா வெங்கட். இதனை பார்த்த ரஜினி படத்தில் ஒரு மகள் தான் இருக்க வேண்டுமா? இரண்டு மகள் இருப்பது போல் கதையை மாற்றுங்கள் என்று கூறிவிட்டார்.
அதன் பிறகு அனிதா வெங்கட்டுக்கு அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அனிதா வெங்கட் மற்றும் அவரின் அம்மா இருவருக்கும் அமருவதற்கு சேர் கூட வழங்காமல் இருந்திருக்கிறார்கள். அதன்பிறகு தரையில் உட்கார்ந்து இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ரஜினி உடனே ஆட்களை அழைத்து இருக்கின்றார்.
இவங்க இப்ப என் மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அவங்களும் என் மகள் தான். எனக்கு கொடுக்கும் அதே மரியாதையை அவுங்களுக்கும் கொடுக்க வேண்டும். நான் நடிக்கும் படங்களில் இனி இதுபோல நடக்கக்கூடாது என்று கூறி அவர்களை கண்டுபிடித்து விட்டாராம். இதனை அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய நெகழ்ச்சியை ஏற்படுத்தியிருந்ததாக அந்த பேட்டியில் அனிதா வெங்கட் பேசியிருக்கின்றார்.