பத்மாவத் படத்தில் நடிக்க நோ சொன்ன தென்னிந்திய நடிகர்… நல்ல படம் போச்சே!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:30  )

Padmavat: பாலிவுட்டில் மிகப்பெரிய சூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்த பத்மாவத் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த முதலில் தென்னிந்திய நடிகர் ஒருவரை தான் அணுகியதாக தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

பாலிவுட் பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான திரைப்படம் பத்மாவத். திரைப்படத்தில் தீபிகா படுகோன், சாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். 180 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகியிருந்தது.

இத்திரைப்படம் கலவையான மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை ரசிகர்களிடம் குவித்தது. இந்தியாவின் சில மாநிலங்களில் இப்படம் வெளியிடப்படவில்லை. அவ்வாறு இருந்தும் வசூல் 500 கோடியை தாண்டியதும் குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூலை குவித்த மூன்றாவது படமாக பத்மாவத் இடம் பிடித்தது. 64வது ஃபிலிம் ஃபேர் விருதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் உள்ளிட்ட விருதுகளை குவித்தது. மேலும் அந்த ஆண்டுக்கான மூன்று தேசிய விருதுகளையும் இப்படம் குவித்தது.

இப்படத்தில் சாகித் கபூர் மகாராவத் ரத்தன் சிங் என்னும் மன்னன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தென்னிந்தியாவின் பிரபல நட்சத்திரமான பிரபாஸைதான் படக்குழு அணுகி இருக்கிறது.

ஆனால் அவர் இன்னொரு மிகப்பெரிய படத்தில் நடித்து கொண்டு இருப்பதாக கூறி இத்திரைப்படத்தை முடியாது என மறுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில் பிரபாஸ் நடித்து வந்த திரைப்படம் பாகுபலி 2 என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story