லப்பர்பந்து ஹீரோவுக்கு அடித்த ஜாக்பாட்… இனி வாழ்க்கை வேற லெவல் தான் போங்கோ!..
Lubberpanthu: கோலிவுட்டின் சமீபத்திய சூப்பர் ஹிட் திரைப்படமான லப்பர் பந்து படத்தின் நாயகன் அட்டக்கத்தி தினேஷ் அடுத்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
முன்னணி நடிகர்களை வைத்து பெரிய பட்சத்தில் படத்தை இயக்கினால் தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற லாஜிக் தமிழ் சினிமாவில் உடைந்துவிட்டது என்று தான் கூற வேண்டும். கடந்த இரண்டு வருடத்தில் மட்டுமே சின்ன பட்ஜெட்டில் ஹிட் அடித்த படங்களின் லிஸ்ட் அதிகம்.
அதில் சமீபத்திய வரவாக அமைந்திருப்பது தான் லப்பர் பந்து. தெரு கிரிக்கெட்டை மையமாக வைத்து சில பல மேஜிக்களை தூவி கேப்டனின் பழைய ரெட்ரோ பாடலை உள்ளே இணைத்து ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துவிட்டார் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து.
அதிலும் இப்படத்தில் நாயகன் எனக் கூறப்பட்ட ஹரிஷ் கல்யாணை விட அப்பா கேரக்டரில் நடித்த அட்டக்கத்தி தினேஷிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த கெத்து கேரக்டர் பெரிய அளவில் ரசிகர்களிடம் லைக்ஸை குவித்து மீண்டும் கோலிவுட்டில் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியிருக்கிறார் தினேஷ்.
பா ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் வெட்டுவம் படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நாயகனாக நடிக்க இருக்கிறார். அவருக்கு வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தில் அசோக் செல்வன் முக்கிய வேடம் ஏற்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.
விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிகிறது. பா ரஞ்சித் தன்னுடைய அறிமுக நாயகனை மீண்டும் இப்படத்தில் இயக்க இருக்கிறார். லப்பர் பந்தை போல இப்படமும் அட்டக்கத்தி தினேஷுக்கு ஹிட் படமாக அமையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.