Categories: Cinema News latest news

பராசக்தி ஷூட்டிங் ஸ்பாட் சீன் வீடியோ லீக்!.. ஜெயம் ரவி சும்மா செமயா நடிக்கிறாரே!..

Parasakthi update: சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகி வரும் திரைப்படம்தான் பராசக்தி. இந்த படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடித்து வருகிறார். சூர்யாவை வைத்து புறநானூறு என்கிற படத்தை சுதாகொங்கரா இயக்குவதாக செய்திகள் வெளியானது. 1964ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கதை அது.

பாலிவுட்டுக்கு செல்லவிருப்பதால் ஹிந்தி எதிர்ப்பு கதையில் நடித்தால் சரியாக இருக்காது என நினைத்த சூர்யா கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்ல சுதா கொங்கரா அதை எற்கவில்லை. எனவே, சூர்யா அப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதன்பின் சிவகார்த்திகேயன் அந்த படத்தில் நடிக்க முன் வர பராசக்தி என்கிற பெயரில் அப்படத்தை சுதா கொங்கரா உருவாக்கி வருகிறார்.

கோலிவுட்டை பொறுத்தவரை ஒரு நடிகர் நடிக்கும் படத்தில் மற்ற நடிகர்கள் நடிக்க முன்வரமாட்டார்கள். ஆனால், இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு அதர்வா மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சுதா கொங்கரா சொன்ன கதையும் கதையில் தங்களுக்கு இருக்கும் முக்கியத்துவமும்தான்.

சென்னையில் துவங்கி புதுச்சேரியில் சில இடங்களில் நடந்த படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. 1960 கால கட்டங்களில் நீதிமன்றங்கள் மற்றும் ரயில்வே நிலையங்களின் அமைப்பு எப்படி இருந்ததோ இப்போது அப்படியே இலங்கையில் இருக்கிறது.

எனவேதான், அங்கு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுதா கொங்கரா. ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் சிவகார்த்திகேயன் நடந்து செல்வது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கையில் வாக்கி டாக்கி வைத்துகொண்டு கோபத்துடன் ஜெயம் ரவி பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது.

ஜெயம் ரவி கோபமாக பேசுவதை பார்க்கும்போது கண்டிப்பாக சீரியஸான காட்சியை சுதா கொங்கரா எடுத்து வருகிறார் என்பது புரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் எடுக்கப்படும் காட்சிகள் தொடர்ந்து லீக் ஆகி வருவது படகுழுவினரை அதிர்ச்சி அடையவும் செய்திருக்கிறது.

Published by
சிவா