யாராவது இதுவரைக்கும் இத கவனிச்சீங்களா?‘மகாராஜா’ படத்தில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டிய பார்த்திபன்

by ராம் சுதன் |

விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இது அவருடைய ஐம்பதாவது திரைப்படம். படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் ஹீரோவாக நீண்ட நாளுக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் தான் இந்த படத்தையும் இயக்கியவர். கிட்டத்தட்ட குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு ஏழு வருட காத்திருப்புக்குப் பின் இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருக்கிறார்.

படம் எதிர்பார்ப்பையும் மீறி பெரிய அளவில் வெற்றி அடைந்திருப்பது தான் இந்த படத்திற்கான கூடுதல் சிறப்பு. ஹீரோவாக விஜய் சேதுபதி மறுபடியும் ஒரு கம்பேக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் மகாராஜா திரைப்படத்தை பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் கூறி இருக்கும் செய்தி இப்போது வைரலாகி வருகின்றது.

அதற்கு முன் நித்திலன் சாமிநாதனுடன் பார்த்திபன் இணைந்து பணியாற்றி இருப்பதாக கூறி இருக்கிறார். அதாவது குரங்கு பொம்மை படத்தில் ஒரு பாட்டுக்காக பார்த்திபன் நடித்துக் கொடுத்தாராம். ஆனால் அந்த படத்தில் இருந்து அந்த பாட்டை டெலிட் செய்து விட்டாராம் நித்திலன் சாமிநாதன்.

அப்பவே பார்த்திபன் நித்திலன் சாமிநாதனிடம் 'நீ ஒரு பெரிய டைரக்டராக வருவாய்' என கூறினாராம். ஏனெனில் மக்களிடம் பரீட்சையமான ஒரு நடிகரை நடிக்க வைத்தால் படம் ஓரளவு வரவேற்பை பெறும் என்ற காரணத்தினாலே சில நடிகர்களை இயக்குனர்கள் நடிக்க வைப்பதுண்டு. ஆனால் இந்த படத்தில் நான் நடித்தும் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை அவர் வெட்டி எறிந்து இருக்கிறார் என்றால் அவர் எப்பேர்ப்பட்ட இயக்குனராக இருப்பார் என்பதை நான் அப்பவே கணித்து விட்டேன்' என பார்த்திபன் கூறினார்.

மேலும் மகாராஜா திரைப்படத்தை அனைவரும் பார்த்து முதல் நாளிலேயே என்னிடம் படம் நன்றாக இருக்கிறது என கூறி வந்தார்கள். அதன் பிறகு நான் படத்தை பார்த்தேன் .ஆனால் படத்தில் எனக்கு ஒரு ஐந்து கேள்விகள் இருந்தன. அதனால் நித்திலன் சாமிநாதனிடம் அந்த ஐந்து கேள்விகளைக் கேட்டு என்னுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொண்டேன்.

ஆனால் இந்த கேள்விகளை கேட்டதும் நித்திலன் சாமிநாதன் 'இந்த விஷயங்களை இதுவரை யாரும் கண்டு பிடிக்கவே இல்லையே' என கூறினார் . இருந்தாலும் நான் படத்தில் உள்ள அந்த கேள்விகள் என்னென்ன என்பதை நான் இப்போது வெளியில் சொல்ல மாட்டேன். ஒரு பத்து வருடம் கழித்து நான் சொல்கிறேன் என பார்த்திபன் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

Next Story