பார்த்திபன் கொடுத்த பேட்டியால் மீண்டும் குடும்பத்தில் ஏற்பட்ட பூகம்பம்.. சீதாவுக்காக ஓடிவந்த மகள்

by ராம் சுதன் |

சமீப காலமாக பார்த்திபன் அவருடைய வாழ்க்கை குறித்தும் அவருடைய காதல் அனுபவங்களை பற்றியும் திருமண வாழ்க்கையை பற்றியும் ஒரு பேட்டியில் ஏராளமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். ஆனால் அவர் அளித்து வரும் பேட்டியில் நடிகை சீதாவை பற்றி எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாக பார்த்திபன் கூறவே இல்லை.

ஆனால் அவர் நடித்த சொர்ணமுகி படத்தை பற்றியும் நடிகை சீதாவை பற்றியும் கம்பேர் பண்ணும் விதமாக ஒரு செய்தியை பகிர்ந்து இருந்தார் பார்த்திபன். இதை ஒரு சேனல் ஒன்று சேர்த்து சொர்ணமுகி படத்தில் வரும் கதைதான் பார்த்திபன் வாழ்க்கையிலும் நடந்திருக்குமோ என்ற வகையில் எழுதி இருந்தார்களாம்.

அதாவது சொர்ணமுகி படத்தின் கதைப்படி பார்த்திபனும் ஹீரோயினும் காதலிக்க ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு வேறொரு நபர் மீது காதல் ஏற்பட அதனால் பார்த்திபன் ஹீரோயினை விட்டு ஒரேடியாக விலக வேண்டும் என நினைக்கிறார். இதை பேட்டியில் வேறு விதமாக கூறியிருப்பார் பார்த்திபன்.

ஆனால் இதுதான் இவருடைய நிஜ வாழ்க்கையில் நடந்திருக்குமோ என்ற வகையில் ஒரு பத்திரிகை எழுதி இருந்ததாம். இதை பார்த்ததும் சீதா அதிர்ச்சி அடைந்து விட்டாராம். அது மட்டுமல்லாமல் சீதா தன் மகளிடம் இதைப் பற்றி பகிர்ந்து வருத்தமுடன் கூறியதாக தெரிகிறது .உடனே பார்த்திபனின் மகள் அவருடைய அப்பாவுக்கு தொலைபேசியில் அழைத்து ஏன் இவ்வாறு பேசினீர்கள் என்றபடி கேட்டிருக்கிறார்.

அதற்கு பார்த்திபன் நான் அவ்வாறு பேசவில்லை. இரண்டு விஷயங்களையும் சேர்த்து பத்திரிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள். சீதா இதனால் ஏதாவது வருத்தப்பட்டு இருந்தால் அதற்கு நான் சாரி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினாராம் . எதையும் வெளிப்படையாக பேசும் பார்த்திபன் இந்த பேட்டியிலும் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தது மீண்டும் அவருடைய குடும்பத்தில் ஒரு குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் பார்த்திபனுக்கும் சீதாவுக்கும் இடையில் இன்னும் ஒருவிதப் புரிதல் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்தாலும் மகள் என்று வரும்போது இருவரும் ஒன்றிணைந்து விடுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை தனித்தனியாக வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம் பார்த்திபன் தன்னுடைய சினிமா கனவை நோக்கி பயணித்து வருகிறார். புதுப்புது முயற்சிகளோடு திரைப்படங்களை இயக்குவதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். வரும் 12ஆம் தேதி இவருடைய இயக்கத்தில் டீன்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதுவும் இந்தியன் 2 திரைப்படத்தோடு இவருடைய படம் நேரடியாக மோதுவதால் டீன்ஸ் திரைப்படத்தின் மீதும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Next Story