அவங்க மனசுல வேறொருத்தர் இருக்கும் போது என்ன பண்ண முடியும்? தன் காதல் பற்றி பார்த்திபன் சொன்ன உண்மை

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்தவர்கள் கடைசியில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். தனுஷ் - ஐஸ்வர்யார் ரஜினிகாந்த், ஜெயம் ரவி - ஆர்த்தி என வரிசையாக கோலிவுட்டில் பல அதிர்ச்சியான விவாகரத்து சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் அதற்கு விதை போட்டவர்கள் என்றால் பார்த்திபன் மற்றும் சீதாவை சொல்லலாம்.

ஒரு சிறந்த நட்சத்திர தம்பதிகளாக இருந்தவர்கள்தான் பார்த்திபனும் சீதாவும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொண்டது கோலிவுட்டில் அந்த நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் உங்கள் பிரிவை நினைத்து உங்கள் பிள்ளைகள் எதுவும் சொல்லவில்லையா? அவர்களுக்கு கஷ்டமாக இல்லையா என்ற ஒரு கேள்வியை தொகுப்பாளினி ஒருவர் சமீபத்தில் பார்த்திபனிடம் கேட்டார். அதற்கு பார்த்திபன் சொன்ன பதில்தான் இது.

ஆரம்பத்தில் எங்கள் பிரிவு எங்களுக்கும் கஷ்டமாக இருந்தது. எங்கள் பிள்ளைகளுக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. என் வாழ்க்கையில் ஆயிரம் காதல் வரலாம். ஆயிரம் காதல் போகலாம்.என்ன பண்ணாலும் அந்த காதலும் அந்த மனைவியும் மறுபடியும் ஒரு தடவை என் வாழ்க்கையில் வரவே முடியாத அளவுக்கு ஒரு உச்சபட்சமான சந்தோஷமும் மகிழ்வும் தான் அந்த வாழ்க்கை. அது உணர்வுப் பூர்வமானது.

இந்த பிரிவை தவிர்க்க முடியாது. ஆனால் நாகரீகமாக இருக்கிறது. நாங்கள் பிரிந்தாலும் எந்த இடத்திலும் ஒருத்தருக்கொருத்தர் திட்டி பேசினதே கிடையாது. அதுக்குப் பேர்தான் காதல். இப்பவும் அவங்க மேல் ரெஸ்பெக்ட் அப்படியே இருக்கிறது. சொர்ணமுகி படத்தோட மேஜர் விஷயம் பாருங்க. நானும் அவளும் காதலிச்சோம். அவள் மனசுக்குள்ள வேறொருத்தன் வந்துட்டான்.

அப்படி இருக்கும் போது அவள் மனசுல இருந்து என்னை முழுவதுமாக வழிச்சுக்கிட்டு துடைக்க வேண்டும். அதைத்தான் செய்தேன். ஆனால் அப்போது நான் காதலில் இருந்தேன். ஆனால் பிரச்சினை இருந்தது. இப்போதும் எனக்குள்ள காதல் இருக்கு. அதுவும் பிரச்சினையில்தான் இருக்கிறது என அவருடைய ரியல் வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி பார்த்திபன் வெளிப்படையாக கூறினார்.

இதை பற்றி தொகுப்பாளர் ரியல் வாழ்க்கையில் இப்போதும் காதலிக்கிறீர்களா? என கேட்டதற்கு அதற்கு பதில் அளித்த பார்த்திபன் ‘காதல் இல்லாத வாழ்க்கை என்பது முடியாத ஒன்று’ என பதில் கூறினார்.

Next Story