Cinema News
சிவாஜி, கமல் கூட தொட முடியாதத நான் செஞ்சேன்! ஆனால் கிடைச்ச கிஃப்ட் என்ன தெரியுமா? பார்த்திபன் ஆவேசம்
இன்று இந்தியன் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்ற ஒரு கேள்வி இருந்தாலும் இன்னொரு பக்கம் பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தியன் 2 படத்திற்காக கமலும் சம்பந்தப்பட்ட குழுவும் எப்படிப்பட்ட பிரமோஷனை செய்தார்களோ அதற்கு இணையாக தனி ஆளாக இருந்து பார்த்திபன் அவருடைய டீன்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக பல youtube சேனல்களுக்கு பேட்டி அளித்து வந்தார்.
அதில் அவர் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்திருந்தார். எப்பொழுதுமே ஒரு வித்தியாசமான முயற்சியுடன் களமிறங்கும் பார்த்திபன் இந்த படத்திலேயே அப்படிப்பட்ட ஒரு முயற்சியை எடுத்து இருப்பார் என்று தான் தெரிகிறது. ஆனால் டீன்ஸ் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு ஜனரஞ்சகமான கமர்ஷியல் ஆன ஒரு கலெக்ஷனை அள்ளும் படமாக தான் இருக்கும் என பார்த்திபன் கூறியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் டீன்ஸ் திரைப்படம் நான் விருது வாங்க வேண்டும் என்பதற்காக எடுக்கவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை என்றும் கூறியிருக்கிறார். ஆனால் இதற்கு முன் அவர் எடுத்த ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் போன்ற படங்களுக்கு நான் விருதை எதிர்பார்த்தேன். அதில் நியாயம் இருக்கிறது.
ஒத்த செருப்பை பொருத்தவரைக்கும் சிவாஜி, கமல் செய்யாததை நான் அந்த படத்தில் செய்து இருக்கிறேன். அப்படி ஒரு வித்தியாசமான முயற்சியை ஒத்த செருப்பு படத்தில் நான் செய்திருக்கிறேன். அதனால் அந்த படத்திற்காக விருதை எதிர்பார்த்தது நியாயம். அதுமட்டுமல்லாமல் அந்தப் படத்தை கொண்டாடாத பத்திரிகையாளர்கள் மீது கோபம் வந்ததற்கும் நியாயம் இருக்கிறது. ஆனால் டீன்ஸ் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் நான் விருதை எதிர்பார்க்கவில்லை என ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பார்த்திபன்.
