மாற்றி மாற்றி பேசி ட்ரோலில் சிக்கும் விஜய்!.. தளபதிக்கு அரசியல் செட் ஆகுமா?....

Actor Vijay: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். இவர் 200 கோடி சம்பளம் கேட்டாலும் கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர் அதிகம் பேசமாட்டார். படப்பிடிப்பு தளங்களில் கூட யாரிடமும் அதிகம் பேசாமல் கேரவானில் இருப்பார். நடிக்க கூப்பிட்டால் வந்து நடித்துவிட்டு மீண்டும் கேரவானுக்குள் சென்றுவிடுவார்.
மிகவும் அமைதியான சுபாவம் கொண்டவர். யாருடன் கலகலப்பாக பேசும் நபர் அவர் இல்லை. ஆனால், இப்படிப்பட்டவர்தான் இப்போது அரசியல்வாதி ஆகியிருக்கிறார். அவரின் நிஜ சுபாவம் சினிமா தொழிலை பாதிக்கவில்லை. ஏனெனில், துவக்கத்தில் விஜய் மீது பலருக்கும் கோபம் வந்தாலும் ஒரு கட்டத்தில் ‘விஜய் இப்படித்தான்’ என்பதை பலரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள்.
விஜயின் அரசியல்: ஆனால், அரசியல் அப்படி அல்ல. நிறைய பேச வேண்டும். அதுவும் மக்களை கவரும்படி பேச வேண்டும். ஆளும் கட்சியை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி போராட வேண்டும். செய்தியாளர்களை அடிக்கடி சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் அரசியல் கட்சியை ஆரம்பித்து இதுவரை செய்தியாளர்களையே சந்திக்காத ஒரே அரசியல்வாதி விஜய் மட்டுமே. அதோடு, பனையூரில் இருந்து மட்டுமே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது. அதோடு, விஜய் மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.
அரசியல் தலைவர்கள்: லியோ ஆடியோ விழாவில் பேசிய ‘விஜய் சினிமாவை சினிமாவாக மட்டுமே பாருங்கள். அது ஒரு பொழுதுபோக்கு’ என்று பேசினார். ஆனால், அரசியல்கட்சி துவங்கியபின் விக்கிரவாண்டி மாநாட்டில் பேசும்போது ‘எதுக்கெடுத்தாலும் கூத்தாடின்னு சொல்றீங்க. சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமில்லை. சினிமாவிலிருந்து வந்தவங்கதான் அரசியல் பெரிய அளவில் சாதிச்சி காட்டினாங்க’ என பேசினார். ‘அவர்களே.. இவர்களே என பேச மாட்டேன் என அங்கு பேசிய விஜயே ஒரு இடத்தில் ‘அவர்களே இவர்களே’ என பேசினார்.
இரட்டை நிலைப்பாடு: அதேபோல், மாநாட்டில் ஆளுனருக்கு எதிராக தீர்மானம் போட்ட விஜயே கொஞ்ச நாளில் ஆளுநரை சந்தித்து மனுவும் கொடுத்தார். இதையெல்லாம் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு ‘விஜய் பேசுவது ஒன்று. நடந்துகொள்வது ஒன்றாக இருக்கிறது’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். தான் பேசுவதை மக்கள் எவ்வளவு கூர்ந்து கவனிக்கிறார்கள் என்பதை விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.